நேர் கொண்ட பார்வை

பிங்க் வெளிவந்த நேரம் ஒரு ரசனை அலையை ஏற்படுத்தியது.

அந்த பாத்திரத்தில் அஜீத்!

ஒரு மோஸ்ட் வாண்டட் ஹீரோவுக்கு இது எவ்வளவு ரிஸ்க் என்பது சொல்லித்தெரியவேண்டாம்.

அமிதாப் அப்படியல்ல, பல ரவுண்டுகள் வந்த பின்னர்தான் இன்று அசத்துகிறார். அமிதாப்பின் திரைக்காலம் அஜீத்தின் காலத்தை விட நீண்டது என்பதும் இந்த படத்தை அஜீத் செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியது.

இயக்குனர் வினோத் இதற்கான நியாயத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

சும்மா பர பரக்குது திரைக்கதை.

இரண்டு அதிரடி காட்சிகளும் அஜீத் ரசிகர்களுக்கு ஆசுவாசம்.

என்னுடைய தோழர் ஒருவர் தேநீர் கடை வைத்திருக்கிறார். கட்டாயம் பாருங்க சார். குடும்பத்தோடு பாருங்கள் என்றார்.

ஏன் என்றேன்.

ஜீன்ஸ் போட்டுகிட்டு பசங்களோடு சுத்தினால் என்ன ஆகும் என்று பெண் பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்றான் சார் அஜீத் என்றார்.

நம்மவர்கள் புரிந்து கொள்ளும் லெவலே வேறு!

ஜட்ஜையா வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்

இட் இஸ் எ நியூ பிகினிங்.

கீப் ராக்கிங் அஜீத்.

ரொம்ப நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் அஜீத்துக்கு.

அடுத்த பதிவில் சந்திப்போம்

அன்பன்
மது

Comments

  1. நல்லதொரு திரைப்படம் என்று பலரும் சொன்னதைப் படித்தேன் மது. பிங்க் பார்க்கவில்லை! இந்தப் படமும் இன்னமும் பார்க்க வாய்க்கவில்லை.

    ReplyDelete
  2. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக