ஹைவேமென் 2019

The Highwaymen, Netflix
1930களில் அமெரிக்காவை அலறவிட்ட காதல் ஜோடி போனி அண்ட் கிளாய்ட். 1934இல் தங்கள் பல சகாக்களை ஒரு பண்ணை ஜெயிலில் இருந்து தப்பவைக்கிறார்கள். (பண்ணை ஜெயில், சும்மா சோத்தை போட்டு உட்கார வைத்திருக்காமல் கைதிகளை பணி செய்ய வைப்பது).

டெக்சாஸ் கவர்னர் மா பார்கூசன், இந்த கொலைகார ஜோடியை பிடிக்க என்ன செய்வது என்று தன் அவரது ஆலோசகரை கேட்க அவர் இவர்கள் போலவே ஆனால் சட்டத்தின் பக்கம் இருந்து கொலை செய்யும் டெக்சாஸ் ரேஞ்சர் பிரான்க் ஹாமர்தான் சரி என்கிறார்.

இன்னது அவனுகளா, வேண்டாம் என்கிறார் மா... ஒரு பிரச்சனையில் ரேஞ்சர் பிரிவையே ஊத்தி மூடியவர் மா. அவர்களை விட திறன்மிக்க புதிய படை என்று அரசியல் ஸ்டன்ட் வேறு விட்டாச்சு. இப்போ போய் அவனுகளை திரும்ப கூப்பிட்ட பிரஸ் நம்மளை கிழிச்சு தொங்க விட்டுடுவான் என்கிற பயத்தில் இரகசிமாக செய்யுங்கள் என்கிறார்.

 லீ நதிக்கரையில் இருக்கும்  பிரான்க் வீட்டிற்கு போகிறார்.

ஹீரோ பிரான்க் முதலில் திரையில் வருகிறார், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றின் கரையில் அவர் அமர்ந்திருக்க காமிரா விரிந்து தம்பிகளா இவர் மாஸ் ஹீரோடா என்கிறது.

நான் ஹைவேமென் நல்லா இருக்கும்னு சொன்னதாலே பார்த்தேன். ஆனால் யார் படம்னேல்லாம் பார்க்கலை. இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே, யாரு இதுன்னு பார்த்தா ...திகீர் ஆயிட்டு

கெவின் காஸ்ட்னர்

ஆக்சன் சூப்பர் ஸ்டார், உலகின் அதீத செலவில் தயாரிக்கப்பட்ட வாட்டர் வோர்ல்ட் படத்தின் நாயகன்.  படத்தின் நாயகன். இன்று மேக்கப் மென்களை படுத்தி எடுத்து டிஜிடல் டி ஏஜிங் பண்ணாமல் தனக்குரிய வயதிற்கு ஏற்ற ஒரு ஆக்சன் படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இப்படி அமைவது ஒரு பெரிய விசயம் என்றால் அதைவிட பெரிய விசயம் அந்த பாத்திரத்திற்கும் வாய்ப்புக்கும் நியாயம் செய்வது .

கெவின் ஸ்கோர் செய்துவிட்டார், அலட்டிக்கவே இல்லாமல் நடிப்பில் முத்திரை பதித்துவிட்டார்.

இளம் காஸ்ட்னரை எப்படி ரசித்தேனோ, அதேபோல இன்றைய காஸ்ட்னரும் அசத்தல்.

சரி ஸ்பாயில்ரை தொடர்வோம்

1932இல் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் வீடு, அழகான மனைவி, நண்பர்களுடன் பார்டி என்று வாழும் சூழல்,

ஹைலைட்டாக ஒரு செல்லப் பன்றிக் குட்டி(உவ்வேக் என்கிறீர்களா?) லீயை வரவேற்பது இந்த பன்றிக் குட்டிதான், அரண்டு ஓடி காரில் ஏறப்போகும் லீ, திடுமென ஒரு கட்டளை காற்றில் வர அப்படியே அமர்ந்து மீண்டும் வீட்டிற்குள் ஓடும் பன்றிக் குட்டி வழக்கம்போல வரும் ஹீரோ, விசயத்தை கேள்விப் பட்டு சாரி பாஸ் என்னால் முடியாது என்கிறார்.

ஆனால், வழக்கமான காவல்துறை நாயக அதிகாரிகளைப் போலவே ஹாமருக்கும் அந்த வீக்னஸ் உண்டு.

யூனிபார்ம் ஒரு துணி அல்ல! அது அவன் ஆன்மா! ரேடியோ போனி அண்ட் கிளாய்ட் செய்த ஈவிரக்கமற்ற இன்னொரு கொலையை சொல்ல, ஹாமரின் மனைவி எனக்கு சத்தியம் செய் திரும்பி வருவேன்னு என்று சொல்லிவிட்டு, தன்னுடைய புத்தம் புது போர்ட் காரை எடுத்துகிட்டு போ என்கிறார்.

லீயிடம் இருக்கும் ரகசிய டேட்டாவை பெற்றுக்கொண்டு தன்னுடைய நண்பன் பெஞ்சமின் மானி கால்ட்டை சந்திக்கப் போகிறான்.

பெஞ்சி டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் பிரிவிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு வறுமையில் உழல்கிறான். சோத்துக்கே வழியில்லை.

இவன் வீட்டை தூரத்தில்  இருந்து பார்த்துவிட்டு  ஹாமர் வண்டியை திருப்பி விடுகிறான். ஒரு துப்பாக்கி விற்கும் கடையில் சிறிய படையணி ஒன்றை நடத்தும் அளவிற்கு துப்பாக்கிகளை வாங்குகிறான். வெளியில் வந்து காரை எடுக்க போகும் பொழுது கவனிக்கிறான். பெஞ்சமின் நீட்டா டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறான். யாரோ வந்துட்டு போறாங்கன்னுதான் பார்த்தேன், சப்பை மாறி ஓட்டும் பொழுது நீதான்னு தெரிஞ்சுடுச்சு என்கிறான் பெஞ்சி .

வேட்டை ஆரம்பிக்கிறது.

ஒரே பதிவில்  முடிந்துவிடும் நோக்கம் இல்லை ...

தொடர்வோம் 

Comments

  1. ஓ பட விமர்சனம்!! வழக்கம் போல நல்லாருக்கு. தொடரும்னு வேற போட்டிருக்கீங்க தொடர்கிறோம்...

    கீதா

    ReplyDelete
  2. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக