கரோனா கேர்கிவர்ஸ்


நண்பர்களுக்கு வணக்கம்
கடும் குற்ற உணர்வில்தான் பெரும்பாலோனோர் இருக்கிறோம்
இந்த பெருந்தொற்று நம்மையும் உதவி கோரி நீள்கிற கரங்களையும், பசித்த வயிறுகளையும் பிரித்து வைத்து நம் ஆன்மாவைக் கூறு போட்டு வருகிறது என்கிற வருத்தம் உணர்வுள்ள இதயங்களுக்கு இருக்கும்.
இந்நிலையில் சில நாட்கள் முன்னர் வீட்டில் இருப்போர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் செயல்படும் குழுவினர்க்கு ஆதரவாக செயல்படலாம் என்கிற என்னத்தை நண்பர்களிடையே பகிர்ந்தான் ஸ்ரீ மலை.
தற்போது கரோனா கேர்கிவர்ஸ் என்று ஒரு புலனக்குழுவை உருவாக்கி அதன் அழைப்பை முகநூலில் பகிர்ந்திருந்தான்.
சரசரவென நண்பர்கள் அழைப்பையேற்று இணைய என்னைப் பொறுத்தவரை ஒரு பாவமன்னிப்பு அனுபவமாக தொடர்கிறது அந்தக் குழுவில் என் செயல்பாடு.
மலையின் நண்பர், ஆசிரியர் அப்துல் ஜலில் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே இரநூறு குடும்பங்கள் இருப்பதையும் எந்த உதவியும் இன்றி இருப்பதாகவும் சொல்லி உதவி கோரினார்.
குழுவில் இருக்கும் நண்பர் ஒருவரை தனித்த அழைப்பில் அழைத்தேன். அரசு எதுவம் செய்யுமா என்றேன்.
அவர் இந்த உரையாடல் எனக்கும் உங்கட்கும் மட்டுமே, பெயரைப் போட வேணாம், நான் ஐநூறு கிலோ அரிசிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
இன்று மதியம் இரண்டுக்கு அழைத்தேன்.
இதுபோன்ற பேரிடர்களில் எப்போதும் களத்தில் முதல்வனாக இருக்கக் கூடிய Jpr Bellவசம். கொள்முதலை ஒப்படைத்திருப்பதாகவும், மேலதிக விவரத்திற்கு அவரை தொடர்பு கொள்ளவும் பணித்தார்.
அரிசி மூட்டைகளை ஆலங்குடியிலிருந்து கொணர வேண்டியிருந்தது. இந்த ஊரடங்கில் ஆலங்குடி வரை சென்றுவர ஒரு வாகனம் தேவையாக இருந்தது.
இதுகுறித்து கொரோனா கேர் கிவர்ஸ் குழுவில் நண்பர் பெல் பகிர புதுக்கோட்டையின் தன்னார்வலர்களின் படைத்தளபதி புதுக்கோட்டை அருண்மொழி திருமிகு முத்து அவர்களின் அலைபேசி எண் தந்து உதவ ...இந்த பேரிடர் காலத்தில் ஆலங்குடி வரை பயணித்து அரிசி மூட்டைகளை மேட்டுப்பட்டி உள்ளே இருக்கும் அந்த கிராம மக்களுக்கு வழங்கியது குழு.
நேற்றுவரை இந்தப் பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்து கவனத்துடன் செயல்பட பணித்த புதுகை செல்வா (பெருந்தொற்று ஊரடங்கில் முதல் நாளில் இருந்தே களத்தில் இருப்பவர்களில் ஒருவர்) வழங்கல் நிகழ்வை பொறுப்போடு செய்ய திட்டம்வகுத்துக் கொடுத்தாலும் அவர் இல்லாமல் இந்த நிகழ்வு நடந்தது எனக்கு வருத்தமே.
நானூறு கிலோ அரிசி வழங்கப்பட்டது
விநியோகம் முடிந்த உடன் அதை குழுவில் பகிர்ந்திருந்தார் அப்துல் ஜலீல். மக்கள் கண்களில் பெரும் ஆறுதலோடு பெற்றுக் கொண்டது நிறைவளித்ததாக சொன்னார்.
பெல் அழைத்து நாம் செய்தது இந்த பகுதிக்கு போதவே போதாது, இந்த நாட்களிலும் எந்த வித அடிப்படைக் கட்டமைப்புகளும் இல்லாமல் இந்த மக்கள் இப்படி வாழ்ந்து வருவது கொடுமை என்று சொல்லிவிட்டு மேலதிக உதவிகளுக்காக சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கோரப் போகிறேன் என்றார்.
இந்த நாளை அர்த்தம் மிக்கதாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
௨.
சென்னையில் உதவிகளைச் செய்துவரும் ஜோமன் அறக்கட்டளையினர் உதவி கோரியிருந்தார்கள். சென்னை நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறேன்.
அறந்தையை சேர்ந்த சகாயராஜ் எனும் ஆசிரியர் ஜோமன் அறக்கட்டளைக்கு ரூபாய் இரண்டாயிரம் வழங்கியிருக்கிறார்.
௩. ஆசிரியர் சேக்கிழார் பாலாஜி என்னுடைய கணக்குக்கு ரூபாய் 500யை அனுப்பியிருக்கிறார். இது மின் பரிமாற்றத்தில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறது. வந்தடைந்ததும் பணிகளுக்கு மடைமாற்றப் படும். ஒரு வாத்தி எப்படி ஐநூறு கொடுக்கலாம் என்று யாரும் பொங்கல் வைத்துவிடாதீர்கள், ஊரடங்கு துவங்கிய நாள் முதல் மே மூன்று வரை நாளொன்றுக்கு என்பது பேருக்கு உணவு தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கிறார், வழங்க இருக்கிறார் இவர்
இறைவன் என்பது ஒரு கருத்தே அது உயிர்ப்பது சமூகம் எடுக்கிற சக மனித அக்கறையிலேயே என்பதை உணர்ந்தேன்.
குழுவில் பெயர் சொல்ல விரும்பாத அண்ணன் ஒருவர் இன்னொரு மூட்டை அரிசியை கொடுத்திருக்கிறார். இதை நாளை அப்துல் ஜலில் பெற்றுக் கொள்ள இருக்கிறார்.
நன்றிகள்
உங்கள் ஒவ்வொருவருக்கும்

Comments

  1. நல்ல மனம் வாழ்க. களப் பணி செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. போற்றுதற்குரிய பணி, உதவி. நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. முதல் வரி உண்மை. சமூகப் பணியில் புதுக்கோட்டை நண்பர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பொது நிதியிலேயே தன் பெயரும் புகைப்படமும் போட்டுக்கொள்ள விரும்புபவர்கள்தான் அதிகம். ஆனால் பெயர் சொல்லாமல் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்கள் சத்தமின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது, முன்னெடுப்பிற்கு வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete
  4. Entum enitha payanankal thodaruttum valthukkal ,JMJ

    ReplyDelete
  5. Entum initha payanankal thodaruttum valthukkal , JMJ

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தோழனே

    ReplyDelete

Post a Comment

வருக வருக