2020இல் இந்தியா வல்லரசு என்ற கனவின் துயர்மிகுந்த படம். லட்சக் கணக்கில் உழைக்கும் வர்க்க மனிதர்கள் டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு நடக்கத் துவங்கிய பொழுது. இரண்டு நாட்களில் இவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் பட்டினியால் இறந்துவிட்டனர். நான்காம் நாள் மீடியா துணையுடன் தப்லீக் ஜமாத் பிரச்சனையை கையிலெடுத்தவுடன் இன்று இவர்களில் எத்துணைப் பேர் மரணித்தார்கள் என்கிற கணக்குவரவில்லை. சங்கிகள் இஸ்லாமியர்கள் கரோனோ பரப்புகிறார்கள் என்று கூவ, அப்பாலே போ சாத்தானே என்று நாம் கூவ, இவர்களில் எத்துனைப்பேர் இன்று உயிரிழந்தார்கள் என்கிற கணக்கு வரவில்லை. பசியோடு நடப்பவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் இஸ்லாமிய கிராமத்தினர் பழங்களை கொடுத்து வருகிறார்கள். குழந்தைகள், வயோதிகர்கள் என நடக்கத் தொடங்கும் இவர்கள் அரசியல் நிர்வாக சீர்கேட்டினால் நிகழ்ந்துவிட்ட இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித அவலதின் மௌன சாட்சிகள்.
கொரோனா ?
கண்ணுக்குப் புலப்படா வைரஸ் கிருமி, அபாயத்திலும் அபாயமாக தொற்றினவுடன் தெரியாமல், பத்து நாட்கள் பின்னரோ, அல்லது பதினான்கு நாட்கள் பின்னரோ தெரியவரும் நோயை உருவாகும் கிருமி. பெரும் அதிர்ச்சியாக பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு இருபது நாட்கள் பின்னர் கொரோன தொற்று தெரியவந்து, தற்போது தமிழகம் அலறிக்கொண்டிருக்கிறது.
டார்மெண்டாக இருக்கும் காலத்தில் இதன் இருப்பை காட்டாமல், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றி பெரும் வெடிப்பை நிகழ்த்தும்.
பேஷன்ட் 31 நிகழ்வை கவனித்தால் இது புரியும். தொற்று ஏற்பட்ட பெண்மணி ஒருவர் சைனாவிலிருந்து தென் கொரியாவிற்கு வந்திருக்கிறார். விமான நிலையச் சோதனையில் இவருக்கு உடல் வெப்ப நிலை இயல்பாக இருக்கவே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு வாரங்கள் நாட்டினுள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். திடுமென ஒரு விபத்தில் மாட்ட, மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறார். சின்ன சிராய்ப்புகள் எனவே முதல் உதவி மருத்துவத்துடன் வெளியே வந்துவிட்டார்.
விபத்து நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் கொரோனா அறிகுறிகள் வரவே, மருத்துவமனை சென்றிருக்கிறார்.
ஹை வோல்டேஜ் கம்பியைப் பிடித்தது போல அலறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
எபிடயாலஜிக்கல் லிங்க் விசாரணையில் அந்த பெண்மணி சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ந்துவிட்டார்கள்.
கொரோன பாதுகாப்புக்காக நடந்த சுவிஷேச பிரார்த்தனைக் கூட்டத்தில் இரண்டு முறை கலந்து கொண்டேன்.
அந்தக் கூட்டங்களில் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பிரார்த்தனை முடிந்து ஒரு இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு ஒரு பஃப்பே உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்டு ஒரு வாடகைக் காரில் பயணித்திருக்கிறார்.
கூட உணவு உட்கொண்டோர், வாடகைக் காரின் ஓட்டுனர், அவரது இதர பயணியர் என தென் கொரிய நாட்டின் அறுபது சத தொற்றுக்கு இந்த ஒரே ஒரு பெண்மணி மட்டுமே காரணமாயிருக்கிறார்.
இந்த ஒரு நிகழ்வே நமக்கு இந்த நாட்களின் தீவிரத்தை சொல்லும்.
இக்னரன்ஸ் இஸ் பிளிஸ் என்கிற பதம் நினைவில் வருகிறது.
அறியாமை பெருமகிழ்வு - என்கிறது எவ்வளவு உண்மை என்பது நமது மக்களைப் பார்த்தால் தெரியும்.
எவ்விதக் கவலையும் இல்லாமல் சாலைகளில் திரிவது, செல்பி எடுப்பது, டிக் டாக் வீடியோ போடுவது என கோரோனவிற்கே டப் கொடுக்கும் அறிவிலிகள்.
கியூபா எடுத்த விஸ்வரூபம்
சின்னஞ்சிறு தீவான கியூபாவில் இருக்கும் இன்டெர்பெரான் ஆல்பா 2பி எனும் மருந்து சீன மக்களை காக்கப் பயன்படுத்தப்பட்டது எனும் ஆச்சர்யத்தைவிட உலகமே கைவிட்ட பயணிகளை தன் தீவில் இறங்கச் சொன்ன கெத்து பெரிய விசயம்.
இத்தனைக்கும் இந்த மருந்தை 1980களில் கியூபா உற்பத்தி செய்து வைத்திருக்கிறது என்பதுதான் ஹைலைட்.
சார்ஸ், மெர்ஸ் வகை கரோனவிற்கும் இன்றைய கொவிட்19க்கும் பல வேறுபாடுகள் இருந்தும் இது லாபில் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவு ஆயுதம் என்று சொல்லும் குழுக்களும் இருக்கின்றன.
முதலில் ஆனந்த் மாரியப்பன்
ஆனந்த் மாரியப்பன் ஒரு பங்குச் சந்தை முதலீட்டாளர். இவர் சில காலம் பெருந்தொற்று நோய்கள் குறித்த படிப்பை முடித்து உலக நல நிறுவனத்தில் (WHO)பணியாற்றியிருக்கிறார்.
இவரது வாதத்தை பார்ப்போம்.
கொரோனா என்று வைரஸ் வருவதற்கு முன்பே இதுபோன்ற ஒரு வைரஸ் வரும் உலகம் திண்டாடும் என்று ஆருடம் சொன்னவர் இவர். இவரை பிடித்துவைத்து எப்டி சொன்னப்பா சொல்லு என்றால்.
அய்யா நான் WHOஇல் பணியாற்றினேன், அதோடு இல்லாமல் பங்குச் சந்தையில் இருக்கிறேன். ப்ளட் பாத் என்று சொல்கிற இந்த கரடி நாட்களில் நான் முப்பத்தி ஐந்து லெட்சம் செய்திருக்கிறேன். எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து கணித்து சொன்னதுதான் அது.
என்ன கணிப்பு அது ?
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே உலகின் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கிறது. இதில் இருந்து மீளாமல் உலகின் பல மத்திய வங்கிகள் ரெப்போ ரேட்டை கட் செய்து விளையாடி பங்குச் சந்தையை பலூன் போல ஊதினார்கள். இந்த சித்து விளயாட்டு உலகின் டிரில்லியனர் களால் உருவாக்கப்பட்டது. வீங்கிய பலூனை உடைக்க அவர்களுக்கு ஒரு ஊசி வேண்டும். அந்த ஊசியின் பெயர்தான் கொரோனா. இன்று அசுர பணக்காரர்கள் தங்கள் பணத்தை எடுத்துவிட்டார்கள். இன்னும் அவர்களின் பத்துசதம் பணம் மட்டுமே சந்தையில் இருக்கிறது. அவர்கள் மீண்டும் ஒரு பொய்யான நம்பிக்கையை கொடுத்த சந்தையை வீங்க வைப்பார்கள். மீண்டும் ஒரு ஊசி வேண்டுமே, இயன்றால் மூன்றாம் உலகப் போரைக் கூட அவர்கள் உருவாக்குவார்கள் என்கிறார் அவர்.
அடுத்து தமிழ் பொக்கிஷம்
கொரோனாவின் நேற்றையும் இன்றையும் ஆனந்த் பேசினால் நாளை குறித்து தமிழ் பொக்கிஷம் பேசுகிறது.
அமெரிக்காவில் ஏன் இத்துணை இழப்பு, கவனக் குறைவு, ஏன் மாஸ்க்குகள் கூட இல்லாமல் இருக்கின்றன.
பிரைவேட் டேட்டா யுத்தம் என்கிறார் இவர். அதாவது கொரோனா உயிர்பறித்தால் அதைக் காரணமாகக் காட்டி தனிமனித உரிமைகளை மறுக்கலாம் என்பதே இதற்கு காரணமாக இருக்கும் என்கிறார். அமெரிக்க அரசு கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
அதாவது நீங்கள் இணையத்தில் என்ன செய்கிறீர்கள் முதல், எங்கே செல்கிறீர்கள் வரை எல்லாவற்றையும் அரசு கேட்கிறது. இதற்கு நிறுவனங்கள் இசையும் வரை மரணங்கள் தொடரும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் விளைவுகள் வலதுசாரிகளின் விடிவெள்ளியாக இருக்கும்.
இதே போல காரணமின்றி விசயங்களை தள்ளிப்போடும் விசயத்தை லிங்கன் தொடங்கி வைத்தார். கறுப்பின மக்களுக்கு சம உரிமை பெரும் வரை உள்நாட்டுப் போரை நீட்டித்தார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மூன்று மாதம் தேவையில்லாமல் போரை நீட்டித்து கறுப்பர்களுக்கு சம உரிமை பெற்றுத் தந்தார் லிங்கன். அவர் வாசிப்பில் விளைந்த நேசமிகு தலைவர். இதற்காகவே அவருடைய உயிர் பறிக்கப்பட்டது.
அதே பாணியை ஏன் மோடு முட்டி ட்ரம்ப் செய்யக் கூடாது?
லிங்கன் சமத்துவத்திற்கு செய்த வித்தையை, டிரம்ப் மொள்ளமாறித் தனத்திற்கு செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம்?
நாளைய உலகை வடிவைக்கும் ஒரு பெரும் அரசியல் பொருளாதார கருவி கொரோனா என்பது உண்மைதான். கீழே இருக்கும் படத்தில் இருப்பது போல நம் செயல்பாடுகளை நிரந்தரமாக மாற்றக் கூடிய வல்லமை கொண்டது இந்த கண்ணுக்குத் தெரியாத மரணத்தின் தூதுவன்.
ஜாகர்த்தாவில் எல்போ ஷேக் !
இந்தியாவில் நாளை ?
இந்திய பொருளாதாரமும் ஒன்றும் சொல்லிகொள்ளும் விதத்தில் இல்லை. தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அரசுக்கு பழிபோட ஒரு தலை தேவைப்பட்டது.
சைக்கிள் டயர் கழண்டால்கூட நேருவை குறை சொல்லிக்கொண்டிருந்த கோமியம் குடிக்கிகளுக்கு வாஹாய் வந்தது கொரோனா.
எல்லாவற்றையும் லாக் டவுன் செய்துவிட்டு ராமாயணம் பார்க்கச் சொல்கிறது மத்திய அரசு.
மக்கள் சாரி சாரியாக ஆயிரம் மைல்கள் நடக்கத் துவங்குகிறார்கள். தப்லீக் ஜமாத் ஒன்று வாகாய் மாட்ட கோரோனவிற்கு குல்லாய் போட்டு சங்கிகிகள் கூத்தடிக்கிரார்கள்.
கொரோனா மனித உடலிலிருந்து பரிணாமம் பெற்று வளர்ந்த வலிமைகுன்றிய ஒரு வைரஸ் என்கிறார் அறியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன்.
ஏனோ என் மனம் அதை நம்ப மறுக்கிறது.
அமீத்ஷாவின் மௌனம் அபயகரமானது, என்கிறார் ஒரு பதினைத்து வயது பத்திரிக்கையாளர். ஒருவேளை தப்லீக்கை காரணம் காட்டி எல்லா இஸ்லாமியர்களையும் ஒரு ஜியோலொகேஷன் டாக் அணிய வற்புறுத்தும் திட்டத்தை அவர் முன்னெடுக்கலாம். இல்லை இதைவிட அபாயகரமான பிரித்தாளும் சூழ்சிகளை வடிமைக்கலாம் என்கிறார்அவர்.
நிறைய கேள்விகள்?
காலம் அனைத்திற்கும் விடை சொல்லும்.
காத்திருப்போம்
அன்பன்
மது
அரசியல் சாயம் தேவையா?
ReplyDeleteகொரோனவிற்கு குல்லாய் போடுவது மட்டும் முறையா ?
Deleteகணிப்பு நடக்கவே வேண்டும் என்று வேண்டுகிறேன்...
ReplyDeleteபார்ப்போம்
Deleteகாலம்தான் பதில் சொல்லவேண்டும். காத்திருப்போம்.
ReplyDeleteகாத்திருப்போம்
Deleteஇப்பொழுது நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அந்த பதில் எல்லோருக்கும் ஒரு நல்ல பதிலாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்.
ReplyDeleteநம்பிக்கையோடு தொடர்வோம்
Delete