இர்பான் கான் |
ஏங்க தயவு செய்து மாத்துங்க என்றார் இணையர்.
கனத்த மனதோடு மாற்றினேன்.
இர்பான் கான் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். ஜுராசிக் பார்க் படத்தில் கோடீஸ்வர பார்க் ஓனராக வரும் காட்சிகளை இவரது இந்திய முகத்துக்காக ஏகத்துக்கும் ரசித்தேன்.
உண்மையில் 2001இல் இருந்தே இர்பான் உலக சினிமா பக்கம் சென்றுவிட்டார். பல ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கிறார்.
இர்பானின் பள்ளிப் பருவத்தில் சி.கே நாய்டு டோர்னமென்ட்டில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் நிதிஉதவி இல்லாததால் கிரிக்கட்டுக்கு முழுக்கு போடவேண்டியதாகிவிட்டது.
1984இல் தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சியெடுத்து
சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் 2001இல் தி வாரியர் எனும் பிரிட்டிஷ் படத்தில் நடித்த பின்னர் உலகின் கவனத்தைப் பெற்றவர்.
சைக்கோ கில்லர் வேடமோ, அன்பு கனியும் தந்தை வேடமோ கிடைக்கும் அத்துணை பாத்திரங்களிலும் உச்சம் தொடுவதே இவர் வெற்றிக்கு காரணம்.
ஒவ்வொரு நாளும், ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகளைப் படித்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதும், அதிகாலை மூன்று வரை பணியாற்றுவதும் இவரது பாணி, மனிதரின் இந்த ஓய்வில்லா உழைப்புதான் இவருக்கு மூளை புற்றுநோயைத் தந்திருக்க வேண்டும்.
தனது புற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் நேற்று வயிற்றில் பாக்டீரியா தொற்று என திரு கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருக்கிறார்.
இன்று விடைபெற்றுவிட்டார்.
இந்தியக் கலையுலகிற்கு பேரிழப்பு
--
நேற்று தான் அவரது உடல்நிலை குறித்த செய்தி படித்தேன். நல்ல நடிகர்.
ReplyDeleteகலையுலகிற்குப் பேரிழப்புதான்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
நடிப்புலகத்தில் ஆராதிக்கப்பட வேண்டிய கலைஞனை முன்னதாக நோய் கொள்ளை கொண்டுவிட்டது
ReplyDelete