பாலங்கள் 21


ஸ்பாயிலர் அலர்ட் 

சாட்விக் பாஸ்மென் எனக்கு மிகப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர், இத்தனைக்கும் சாட்டை முதலில் ப்ளாக் பாந்தரில்தான் பார்த்தேன். அந்த திரைக்கதையும் அதற்கு சாட் கொடுத்த உழைப்பும் அற்புதமானது. 


மன்ஹாட்டன் நகரின் இருபத்தி ஒரு பாலங்களையும் தடுத்து போக்குவரத்தை நிறுத்துவதுதான் தலைப்பு.

எதார்த்தமாக யூ டியூப் டிரைலர் பார்த்து இந்தப் படத்தைப் பிடித்தேன். மன்ஹாட்டன் தீவில் ஒரு பின்னிரவில் நான்கு காவலர்கள் கொலையாகிறார்கள். 

சாட் அழைக்கப்படுகிறார். சாட் இந்தப் படத்தில் ஆண்ட்ரு டேவிஸ் எனும் நியூயார்க் காவல்துறை துப்பறிவாளராக இருக்கிறார். நோ மெர்சி காப். 

சட்டத்தை மீறும், குற்றவாளிகளை போட்டுத்தள்ளி பலமுறை விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.

விசாரணை அதிகாரிகளிடம் காவல் துறை பொறுப்பு அவருக்கு டி.என்.ஏவில் இருக்கிறது என்கிறார், வியட்நாம் போரின் பொழுது முதல் வரிசையில் இருந்த வீரர்களில் பத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே போரிட்டார்கள். மீதம் ஏழு பேர் என்ன செய்தார்கள்? அவர்கள் போல தானும் போராடாமல் இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். 

படத்தின் துவக்கமே  சட்ட விரோதிகளால் கொல்லப்பட்ட ஆண்ட்ருவின் தந்தைக்கு நிகழும் இறுதி மரியாதை கூட்டம்தான். ஒரு ஹீரோ காப்பாக, நகரின் அத்துணை அதிகாரிகளும் மழையில் நின்று சல்யூட் அடிக்க நடக்கும் இறுதி மரியாதையை பார்த்தவாறே ப்ளாக் அவுட்டாகும் திரை மீண்டும் அந்தப் பையன் டிடக்டிவ்வாக இருக்கும் பொழுது தொடர்கிறது. 

இரண்டு முகமுடிக் கொள்ளையர்கள், ஒரு வைன் கடையை தாக்கி அங்கே இருக்கும் கொகெய்னைக் கொள்ளையிட முயல்கிறார்கள். ஆனால் அங்கே முப்பது கிலோமட்டும் இருக்கும் என்று நினைத்தால். முன்னூறு கிலோ இருக்கிறது! 

திருடர்களில் ஒருவன்  மைக்கேல் ட்ரூலியோ, முன்னூறு கிலோ இருப்பதைப் பார்த்தவுடன் ஏதோ பெரிய தப்பு கிளம்பிடலாம், நம்மள்ட்ட முப்பது கிலோ என்று சொல்லிவிட்டு இங்கே முன்னூறு கிலோ வைத்திருக்கிறார்கள். வேணாம் ஓடிறாலம் என்கிறான். 

அவன் பங்காளி ரே ஜாக்சன், ஐம்பது கிலோ மட்டும் எடுத்துக்கொண்டு போலாம் என்று பைகளை நிரப்பிக் கொண்டு கிளம்பினால் வெளியே நான்கு போலிஸ்காரர்கள். 

அதுவரை சாதுவாக இருந்த வைன் ஷாப் ஓனர் வேறு கத்தியை எடுக்கிறான். மைக் அவனை போட்டுத்தள்ள, மீதம் இருக்கும் நான்கு போலிஸ்காரர்களை தூக்கிவிடுகிறான் ரே. 

அதற்குள் பின்பக்கமாக வந்த மீதம் இரண்டு போலீசையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சுடுகிறான் ரே. 

வண்டியை எடுத்தால் நேரிடையாக வந்து மோதுகிறது ஒரு போலிஸ் வண்டி. ஓட்ரா என்று சொல்லிவிட்டு அவர்களை சுடுகிறான். அடுத்தடுத்து கார்கள் வர எல்லா போலீசையும் சுட்டுவிட்டு தப்புகிறார்கள். 

நடுநிசியில் ஸ்பாட்டுக்கு  அழைக்கப்படுகிறான் ஆண்ட்ரு(சாட்விக் போஸ்மென்) பார்த்தவுடனே சொல்கிறான் இரண்டு பேரில் ஒருவன்மட்டுமே எல்லா கொலைகளையும் செய்திருக்கிறான்.

இதற்கிடையே திருடர்கள் தங்களுக்கு தவறாக தகவல் கொடுத்த புஷ்ஷை வெளுத்து அவன் மூலம் தங்களை  சிக்கலில் மாட்டிவிட்ட ட்ரக் டீலரை சந்திக்கிறார்கள். 

இவர்களுக்கு சேப் பாசேஜ் தர ஒரு போர்ஜரி பார்ட்டியிடம் அனுப்புகிறார்கள். 

அவன் இவர்களுக்கு பணத்தை லாண்டர் செய்யவும், புதிய பாஸ்போர்ட்களை கொடுக்கவும் செய்கிறான். இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே அங்கே போலிஸ் வருகிறது. பாஸ்போர்ட் பார்ட்டியை சுட்டுவிடுகிறார்கள். அவன் உயிரிழக்கும் பொழுது இது வேற விஷயம், அந்த பென்டிரைவ்வை எடுத்துக் கொண்டு போங்க என்கிறான். 

இப்படி குற்றம் தொடர்பான சாட்சிகள் கொல்லப்படும் விசயங்களில் சாட்டுக்கு விருப்பமே இல்லை, அவன் இமேஜுக்கு மாறாக செயல்படுகிறான். அதாவது குற்றவாளிகளை உயிரோடு பிடிப்பதே அவன் நோக்கமாக இருக்கிறது. 

ஆனால் அவனோடு இருக்கும் பர்ன்ஸ் என்கிற நார்க்காடிக்ஸ் டிடக்டிவ் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொல்வதில் உறுதியாக இருகிறாள். 

குற்றவாளிகளைத் துரத்துதல், பின்னர் நீதியைத் துரத்துதல் என்று படம் இரட்டை கிளைமாக்ஸ் கொண்டது. 

ஜோ ரூசோ, ஆண்டனி ரூசோ இருவரும் தயாரிப்பாளர்கள்.

பிரைன் க்ரிக் இயக்கத்தில் வந்திருக்கும் படம். பால் கேமரோன் சினிமொட்டோ கிராபி அசத்தல். 

ஒரு சினிமாவுக்கு டீடைல் அழகு என்பதற்கு இரண்டு வில்லன்களும் ராணுவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் லோயர் மன்ஹாட்டன் செக்யூரிட்டி இனிஷிஎடிவ் மூலம் ஒரு குற்றம் நடக்கும் பொழுதே அதை தொழில் நுட்பம் கொண்டு அலசுவதும், குற்றத்தில் தொடர்புடையோர் தற்போது மன்ஹாட்டன் நகரில் எந்த மூலையில் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் அறிகிற பொழுது அமெரிக்க தொழில் நுட்பம் அசத்துகிறது. 

ஆக்சன் படப் பிரியர்கள் பார்க்கலாம். 

தொடர்வோம் 
அன்பன் 
மது

Comments

  1. நல்லதொரு அறிமுகம். நன்றி கஸ்தூரி. பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்
    உடனே பார்க்கிறேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக