வயது வந்தோருக்கு மட்டும் ...உண்மையில் இளகிய இதயம் கொண்டோர் படித்துவிட்டு அலறினால் அடியேன் பொறுப்பல்ல.
கிம் ஜி ஊன் இயக்கத்தில் கொய்மின் சக், லீ பியூங் ஹன் நடித்து வெளிவந்ததது.
ஒரு திகில் படத்தைப் பார்க்கிற பொழுது உள்ளங்கைகள் வேர்க்கும், இதயம் வழக்கத்தைவிட பதினைந்து துடிப்புகளை அதிகரிக்கும்.
இது மருத்துவம் சொல்வது, உண்மையா என்று நீங்கள் ஆய்ந்தறிய விரும்பினால் இந்தப் படத்தைப் பாருங்கள், ஒரே தம்மில் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தவர்கள் தங்களைப் பரிசோதிக்கொள்வது நலம்.
பலமுறை நிறுத்தி, இடைவெளி விட்டே பார்க்க இயல்கிறது.
அப்படி என்ன இருக்கிறது படத்தில் ?
பனிபடர்ந்த சாலை ஒன்றில் பஞ்சரான கார் ஒன்றில் இருக்கும் இளம் பெண்ணை தாக்கி, வெறி அடங்கும் வரை சுத்தியால் மண்டையிலேயே அடித்து, கார் முழுதும் இரத்தம் சிதற, மூச்சடங்கும் அவளை பணியில் இழுத்துக்கொண்டே போய்த் தன் கொலைக்குகையில் தள்ளுவது ஒரு துவக்கம்தான்.
காமிரா பிளாஸ்டிக் உரையில் உடையற்ற அவள் உடலைக் காண்பிக்கும் பொழுது ஒரு வெண்டு வெண்டிக்கொண்டு உயிர்க்கும் அவள் உங்களுக்கு கொடுக்கும் நடுக்கம் இருக்கிறதே, சும்மாவா சொல்கிறார்கள் இந்த படம் ஒரு அனுபவம், எவனுக்கு தில் இருக்கோ அவன் பாருடா என்று.
இதைவிட அடுத்த கட்டத்திற்கு போய், என்னைக் கொன்றுவிடாதே, நான் கர்பமாக இருக்கிறேன் எனும் அவளைச் எதோ ஈ போன்ற உயிரைக் கொல்வதைப் போல சிதைத்து கூறு கூறாக வெட்டி பெட்டியில் அடுக்கும் அவன் டெவில் இல்லாமல் வேறென்ன.
இந்தப் புள்ளியில் இருந்து துவங்கும் படம் முரட்டு ஓட்டமாக ஓடி, உங்கள் உள்ளுறுப்புகளை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு அதே கொடூரத்தோடு முடிகிறது.
படம் ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர் எனில், அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சி தொழில் நுட்பங்கள் உச்சம்.
ஒரு டாக்சிக்குள் சுற்றி வரும் காமிரா, டாக்சியில் இருக்கும் மூன்று கொலை வெறி மிருங்கங்கள் ஒருவரோடு ஒருவர் மோதி டாக்சி முழுக்க ரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சியை எப்படி இப்படி படமாக்கினார்கள் என்பது குழுவினர்க்கே வெளிச்சம்.
மனிதக் கறியுன்னும் சைக்கோ கொலையாளியாக கொய் மின் சக், பழிவாங்கும் படலத்தில் தானே ஒரு சைக்கோவாக மாறிவிடும் லீ ஊன் ஹன் என எதிர்பாரா திருப்பங்கள் படத்தில்.
இந்தப் படமும் எனக்கு ஒரு எரிச்சலான கேள்வியைத் தருகிறது. எல்லா சைக்கோக்களும் பெண்களை வெறுப்பவர்கள், எல்லா கொரிய பெண்களும் முழங்கால் வரை ஸ்கர்ட் போட்டுக்கொண்டு சைக்கோக்களால் அடிபட்டு சாகவே படைக்கப்பட்டிருகிறார்கள் எனும் புள்ளியில் இருந்து இவர்கள் வெளியில் எப்போது வருவார்கள்?
காத்திருப்போம்
படிக்கும்போதே டெரரா இருக்கே. :)
ReplyDeleteஇதெல்லாம் எனக்கானப் படமில்லை
ReplyDelete