ஆசிரியம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் உண்டு
இங்கே ஒரு செய்தி
#அமெரிக்க_பள்ளிகள்
#தலைமைத்துவ_பயிற்சி
கல்வி என்பது ?
நாலு எழுத்து சொல்லித் தருவது,
எழுதப் படிக்க சொல்லித் தருவது என்பதே இங்கே பெரும்பாலான கிராமத்து பெற்றோரின் நிலையாக இருக்கிறது
ஆசிரியர் குறித்து பாவ்லோ பிரைரே என்ன சொல்கிறார் என்பதை விட ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்.
பாஸ் செய்ய,
நல்ல மதிப்பெண் பெற
நல்ல பழக்கங்களை உருவாக்க
இதோடு கூடுதலாய் கனவை விதைப்பவர்கள் என்று சொல்வேன் நான்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் அன்பு நண்பர் பாலா, ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது தனது மகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாள் என்றார்.
வியந்து போனேன்
அதன்பின்னர் அருமை சகோதரி கிரேஸ் மருமகன்கள் அவரோடு சண்டையிடுவதாகவும், இந்தியாவில் பிறப்பு என்பதால் அதிபர் வாய்ப்பு தவறிவிட்டதாகவும் வருந்தியதாகச் சொல்லவும் எனக்கு புரிந்தது
அமெரிக்க பள்ளிகள் தலைமை பண்பு பயிற்சியில் எல்லா மாணவர்களுக்கும் தலைமை பீடத்தின் உச்ச நிலையான அதிபர் கனவை விதைக்கின்றன.
தன்னை அதிபர் தேர்தலுக்கு தகுதிப் படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு குழந்தை என்ன விதமான பண்பு நலன்களைப் வளர்த்துக் கொள்ளும், எப்படி தன்னை தானே முனைந்து மேம்படுத்திக் கொள்ளும் என்பதெல்லாம் ஒரு ஆசிரியராக என்னால் உணர்ந்து பார்க்க முடிகிறது.
என்ன ஒரு அற்புதமான விசயத்தை செய்கின்றன அமெரிக்க பள்ளிகள் !
இங்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் ?
ஹும் ஒரு நீண்ட பெருமூச்சு...(விளக்கம் வேண்டுமா என்ன?)
இந்த படங்களை உருவாக்கி பார்த்தேன் நன்றாக இருகின்றனவா ?
சந்திப்போம்
அன்பன்
மது
என்னவொரு கல்வித் திட்டம்...!
ReplyDeleteபதிவின் வழி உங்கள் ஆதங்கம் தெரிகிறது. ஆதங்கம் கொள்வது தான் இங்கே முடிகிறது!
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பதிவுகள்.
நலமே விளையட்டும்.