ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நெட்பிளிக்ஸ் தொடர்.
நாயகி மைய கதைக்களம், செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் என்பதை கடந்து ஆன்மாவை கொண்ட இயந்திர மனிதர்கள் இந்த தொடரில் புதுமையாக
அதைவிட மூர்ச்சையடையச் செய்யும் இன்னொரு விஷயம், ஜிம்னி என்கிற இந்த ரோபாட்டாக நடித்திருப்பது அசுரன் ஆந்தனி ஹாப்கின்ஸ்! குரல் நடிப்பு என்கிற பொழுதும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம்.
தங்களின் ஒரே நம்பிக்கையான இளவரசி கொல்லப்பட்ட பொழுது வாட்களை துறக்கும் ஜிம்னி பிரிவு ரோபாட்கள், அமைதியான வாழ்வை தேர்தெடுக்கின்றன.
ஆனால் மமதை கொண்ட மனித வீரர்கள் ஜிம்னிகளை துன்புறுத்தி ரசிக்கிறார்கள். இப்படி நகரும் கதையில், தனது அடிப்படை நம்பிக்கைகளை, கனவுகளை இழந்துவிட்டதாக சொல்கிறான் ஜிம்னி.
தொலைதூர கிரகத்திலிருக்கும் ஒருத்தி அதை மறுத்து, அந்த உணர்வுகள் உனக்குள்ளே இன்னும் இருக்கின்றன, என்று சொல்லி ஒரு மலர்கிரீடத்தை வைத்து அவன் இயந்திர கன்னத்தை வருடுகிறாள், அதுவரை ஒளிராத அத்துணை புள்ளிகளும் ஒளிர்கின்றன ஜிம்னிக்கு !
சர்வ நிச்சயமாக ஒரு நல்ல காட்சி அனுபவம் இந்த தொடர்.
வன்முறையை விரும்பி அல்ல, வேண்டா வெறுப்பாகவே கையிலெடுக்கும் கதாநாயகி, அசத்தலான அவளது குழு என இந்த தொடர் பார்வையாளனை கட்டிப்போட்டுவிடுகிறது.
சில புள்ளிகளில் இந்த தொடர் தமிழ் திரையிலிருந்து இன்ஸ்பைர் ஆகியிருப்பது போல தெரிகிறது. ஜிம்னி ஒளிரும் புள்ளிகளில், மனதில் இசைக்கும் இரும்பிலே இருதயம் முளைத்ததே பாடல், இளவரசியை கொன்றது யார் என்கிற கேள்வியில் "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான்?" என்கிற கேள்வி மனதில்.
இந்திய திரை தனது பாதிப்பை ஹாலிவுட்டுக்கு செலுத்தும் நாட்கள் இவை.
அவசியம் பாருங்கள்.
அன்பன்
மது
மது! நலமா? ரிபெல் மூன் பார்க்கவில்லை. நீங்க எழுதும்போது எனக்கு தோன்றதெல்லாம் மதுவின் ரசனை கிழக்குனா, நமக்கு மேற்குனுதான் தோனும். எந்த ஒரு படமோ சீரியலோ உங்களைப் போல் உள் இறங்கி பார்த்து ரசிக்கும் உங்க தன்மை எல்லாம் எனக்கு இல்லைனு தோனும். ரிபெல் மூனாயிருந்தாலும் சரி பெருமாள் முருகனின் மாதொரு பாகனாக இருந்தாலும் சரி, நீங்க எழுதுவது மூலம் எனக்கு தோணுவது நீங்க கிழக்கு, நான் மேற்கு. உள்ளே இறங்கிப் போய் ரசிக்கும் தன்மையோ ஒரு கலைஞனை முழுமனதுடன் பாராட்டும் தன்மையோ என்னிடம் இல்லைனு தோணும்.
ReplyDeleteசமீபத்தில் எங்க கம்பெணில லே ஆஃப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. மொதல்ல ஒரு 4 பேரை அனுப்பினாங்க. அடுத்து ஒரு 5 பேரை அனுப்பினாங்க. அப்படி இந்த 4+5 பேரை செலக்ட் பண்ணுறாங்க?னு யோசிச்சா, சி இ ஓ மேலே கோபம் வர்ரததுப் பதிலா அவரை நெனச்சா பாவமா இருக்கும்.
நல்ல வேளை நம்ம இந்த பொசிஷனில் இல்லைனு சந்தோஷப் படுவேன்.
ஐரிஸ்மேன்ல ராபர்ட் டி நீரோ அல் பச்சினோவை கொல்லும் சீனையும் இதையும் கார்ரிலேட் பண்ணுறேன்.
You have got to do it! (Kill or let people go)
That's how the "system" works. NOBODY has absolute power. We all are controlled by someone or some system. It does not matter who we are. a button man or a CEO! Sometimes they have to do to save the system or company. US companies are simple. When they have money, they have to use or spend it. So they hire people to spend the money. In few years, once money stopped coming, they have to lay off people. Fine. Here is where the hard part! How do you select those people? As far as I see, everyone (all my coworkers) think that they are the best employee. Those nine people who were "let go" also. Nobody knows who is going to be let go. They give only four hours (just four hours) to leave the company! It all happens so quickly. You cant face them once they let them go. I avoided eye-contact. I cant give them a job or pay their bills. My sympathies to them will only irritate them. It will not help. Why complicate things. Just be busy working until they let you go! :)
Here there is a border crisis. South Americans somehow want to get into this country and live here illegally. It is a heaven for them. On the other hand, people live here, always worried about lay offs, live in a fear. Hardly feel this place as heaven! :)
Happy New Year to you and your family, Madhu!