ஏஜெண்ட்ஸ் ஆப் ஷீல்டு

 

துவக்கத்தில் எக்ஸ்.பயில், பிறகு, நம்பர்ஸ், ஸ்ட்ரைக் பாக், 24 ரொம்ப பின்னாலே கேம் ஆப் த்ரோன்ஸ் என்று தொடர்களை பார்த்திருந்தாலும் ஏஜெண்ட்ஸ் ஆப் ஷீல்டு  கொஞ்சம் ஸ்பெஷல். 

ஏஜென்ட் கார்ல்சன் தனக்கென தனியே உருவாக்கிவைத்திருக்கும் இன்னொரு காமிக் யுனிவர்ஸ் இது. இதில் வருகிற கேரக்டர்கள், மெயின்ஸ் ஸ்ட்ரீம் அவெஞ்சர்களோடு வர வாய்ப்பில்லை. 

மிக நீண்ட தொடர், ஆனால் எனக்கு ரொம்பப்  பிடித்திருந்தது. 

இந்த தொடரை தொடர்ச்சியாக பார்த்த அனுபவத்தில் நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்கிற பதட்டம் வந்தது. 

இந்த ஆண்டிலிருந்து எவ்வளவு ஆர்வமூட்டும் தொடராக இருந்தாலும் அதை பாதியில் நிறுத்தி, பணிகளை முடித்த பின்னர் தொடர்வது என்கிற புத்தாண்டு உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

ஒரு எபிசோடுக்கு 45 நிமிடம் என்றாலும் 136 எபிசோடுக்கு எவ்வளவு நேரம்...?

இந்த புரிதலைத்  எனக்குத்  தந்தது இந்த தொடர்தான், 

இந்த புரிதலை உடைக்கும் வல்லமை கொண்ட இயக்குனர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதற்காக நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை உடைத்தால் நட்டம் எனக்குதான். 

நிறைய நேரமும், அறிவியல் புதினங்களின் மீது ஆர்வமும் இருக்கும் நண்பர்கள் நிதானமாக பார்க்க வேண்டிய தொடர் இது. 

நேரச்  செலவைத் தவிர எனக்கு இந்த தொடர் மீது வருத்தங்கள் இல்லை, அதுவும் ஒரு காட்சியில் இந்த வசனங்கள்தான் பேசப்படும் என்று உணர்ந்துவிட்டால், நான் அப்பகுதியை வேகமாக கடந்துவிடுவேன். 


#ஏஜெண்ட்ஸ்_ஆப்_ஷீல்டு 

#டிஸ்னி 

Comments