கேரி ஆன் 2024



 கேரி ஆன் 2024 

ஹாலிவுட்டை பொறுத்தவரை கிறிஸ்துமஸை குறிவைத்து படங்களை இறக்குவது வாடிக்கை. தொடர் விடுமுறையில் மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்கிற சந்தைப்படுத்தும் யுக்திதான். 

இந்த வருட கிறிஸ்துமஸ் காரி ஆன், 


ஏர்போர்ட்டில் பாக்கேஜ் செக்கிங்கில் இருக்கும் ஈத்தனுக்கு, ஒரு மர்ம போன்கால் வருகிறது, அதிலிருந்து திருப்பங்கள், எதிர்பாரா விஷயங்கள் என ஈத்தனின் அந்த நாள் மாறிப்போகிறது.

கண்ணில் எதிர்படுபவர்களையெல்லாம் தனது தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் வில்லன் தனி ரகம். 

பால்புதுமையர்கள் வெகு இயல்பாக வெள்ளித்திரையில் காட்டப்பட்டு வருகின்றது இந்திய ரசிகர்களின் புருவங்களை உயர்த்தலாம். 

ஒரு ஏர்போர்ட் எப்படி நடக்கிறது, அதன் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப்படம் வழங்குகிறது. 

விதைக்கலாம் சிவா பரிந்துரையில் பார்த்தேன், நன்றாகவே இருந்தது, 

நெட் பிளிக்கசில் இருக்கு.

ஒருதபா பார்க்கலாம். 


சந்திப்போம் 


அன்பன் 

மது 

Comments