பிறவி பார்வையாளனின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆக்டன் நாஷ்

ஒரு குழந்தை வளர்ந்து ஜாக்கியாகிறது,
இன்னொன்று கூடைப்பந்து அல்லது ஹாக்கியை விளையாடுகிறது.
இக்குழந்தையோ போட்டி வளையத்திற்குள் போகவே வெறுக்கிறது, 
எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, நான் அவர்கள் இல்லை அவர்கள் நான் இல்லை. 


என் முழு இதயத்தோடு போட்டி வீரர்களை நான் ஆராதிக்கிறேன், 
வேடிக்கைக்காகவோ பணத்திற்காகவோ அவர்கள் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். 
பந்தய மைதானத்திற்குள் பெரும் பகட்டுடன் அவர்கள் நுழைவதை,
போட்டியில் ஒருவரை ஒருவர் தாக்கி ஊனப்படுத்திக் கொள்வதில் . 
எனது கூச்சம் நிறைந்த பலவீனமான ஆன்மா பிறர் செய்யும் நாயகத்தன்மை வாய்ந்த செயல்களால் செறி ஊட்டப்படுகிறது.


ஆ என்பவன் 90 தப்படிகள் ஓடி வென்றான், ஆ என்பவன் வெற்றிவீரனை  அடித்து தரையில் சாய்கிறான்,
அவனுடைய முதுகெலும்பை சிதைத்து.
நீங்க நினைக்கலாம் ஈகோவுக்காக இவங்க இடத்துக்கு நான் போக விரும்புகிறேன்னு,
நல்லது ஈகோவை சுலபமா மகிழ்வூட்டிகொள்ளலாம்,
ஆனா ஆர்வ மிகுதியில விளையாடுறவங்க ரொம்ப காட்டுத்தனமா விளையாடுறாங்க,
அவங்க விளையாட்டுல அடுத்தவங்க உணர்வுகளுக்கு இடமே இல்லை,
சமயத்துல எனக்குள்ளேயும் ஒரு போராட்டம் நடக்கும், ஈகோவா அறிவான்னு, எப்பவுமே அறிவு தான் ஜெயிக்கும்.

ஏற்கனவே வீங்கி போன கண்ணுல ஒரு முரட்டு கையால குத்து விழுகும் போது,
முழங்கால்கள் உடைந்து மணிக்கட்டுகள் தெறிக்கும் பொழுது, போட்டி நடத்தும் நடுவர்கள் யாராவது டாக்டர் இருக்கீங்களா பார்வையாளர் வரிசையில் என்று கதறும் பொழுது,
என் ஆன்மா, மிகக் கண்ணியமாக என் உடல் பாதுகாக்கப்பட்டதற்காக நன்றி செலுத்தும்,

விளையாட்டு வீரர்களே, நான் உங்களுக்காக குடிப்பேன், உங்களுடன் சாப்பிட கூட செய்வேன், ஒரு விஷயத்தை மட்டும் எப்பவும் பண்ண மாட்டேன்,
உங்களோட மோதுவதை.
ரேடியம் மதிப்பிற்கு டிக்கெட் வாங்குவதை
ஸ்டேடியத்தில் நீங்கள் தாவி குதிப்பதை பார்ப்பேன்,
ஒரு நிம்மதி பெருமூச்சோடு அப்பாடா நீங்க நான் இல்லை நான் நீங்கள் இல்லை.


ஆக்டன் நாஷ்

One infant grows up and becomes a jockey,

Another plays basketball or hockey,

This one the prize ring hates to enter

That one becomes a tackle or center,

I am just glad as glad can be

That I am not them, that they are not me.

 

With all my heart I do admire

Athletes who sweat for fun or hire,

Who take the field in gaudy pomp,

And maim each other as they romp,

My limp and bashful spirit feeds

On other people’s heroic deeds.

 

Now A runs ninety yards to score,

B knocks the champion to the floor,

Cracking vertebrae and spines,

Lashes his steed across the line,

You’d think my ego it would please

To swap positions with one of these.

 

Well, ego it might be pleased enough,

But zealous athletes play so rough

They do not ever in their dealings

Consider one another’s feelings.

I’m glad that when my struggle begins ‘Twixt prudence and ego, prudence wins.

When swollen eye meets gnarled fist

 

When snaps the knee, and cracks the wrist,

When officialdom demands,

Is there a doctor in the stands?

My soul in true thanksgiving speaks

For this modest of physiques.

 

“Athletes, I’ll drink to you Or eat with you,

Or anything except compete with you, Buy tickets worth their radium,

To watch you gambol in the stadium, And reassure myself anew

That you are not me and I’m not you.

 

 

About the Author

Frederic Ogden Nash (August 19, 1902 – May 19, 1971) was an American poet well known for his light verse, of which he wrote over 500 pieces. With his unconventional rhyming schemes, he was declared the country’s best-known producer of humorous poetry. His light verse even earned him a place on a postage stamp.



Comments