திராவிடம் வெல்லட்டும்


*@கலைஞரும் கல்வி வளர்ச்சியும்*

🌹1952- ஆம் ஆண்டில் - சிலவுகளை காரணம் காட்டி 2,000 பள்ளிக் கூடங்களை அன்றைய சென்னை மாநில முதலமைச்சர் ராஜாஜி இழுத்து மூடினார். 

1953 - ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த காமராஜர் தன்னுடைய 9 ஆண்டு கால ஆட்சியில் 6,000க்கும்  மேற்பட்ட பள்ளிக் கூடங்களை திறந்தார். 
1967- ல் அண்ணா ஆட்சிக்கு வருகிறார்.   சென்னை மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுகிறார். 
நிலையான திராவிட ஆட்சிக்கு வித்திடுகிறார். 

1969- ல் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார்.  

1966- ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அமைத்த கோத்தாரி கமிஷன் அறிக்கையின்படி கிராமங்கள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை தொடங்குகிறார். 

சிறிய ஊர்கள் தோறும் 1000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்குகிறார். 

சற்று பெரிய நகரங்கள் தோறும் கலைக் கல்லூரிகளை தொடங்குகிறார்.

மாவட்டங்கள் தோறும் தொழில்நுட்பக் கல்லூரிகளை தொடங்குகிறார். 

1969 முதல் 75 வரை இடைப்பட்ட இந்த ஆறாண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 49 கலை அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறந்து வைத்து இந்திய கல்வி வரலாற்றில் மிகப் பெரிய சாதனையை செய்கிறார்.

1974 ஆம் ஆண்டில் கலைஞர் அமைத்த கல்வி ஆய்வுக்குழுவின் அறிக்கை 1977 ஆம் ஆண்டு வெளியாகிறது. இந்த அறிக்கையின்படி 1978 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை அன்றைய முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் அவர்கள் ஏற்படுத்தினார். 

அந்த அறிக்கையின் படி கல்லூரிகளில் இருந்த பியூசி வகுப்புகள் சிறிய ஊர்களில் இருந்த உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 50 சதவீத உயர்நிலைப் பள்ளிகள் அதே ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதில் நமது பள்ளப்பட்டி உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. 

கல்லூரி சென்று படிக்க இயலாத கிராமப்புற மாணவர்கள் அருகில் உள்ள ஊர்களில் இருந்த மேல்நிலைப் பள்ளிகளில் தமது பி யு சி படிப்புகளை ப்ளஸ் டூ படிப்புகளாக படித்தார்கள். 

இதனால் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது.  

1989- ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் பள்ளிக்கூட  மாணவ - மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் தந்து கிராம்ப்புற மாணாக்கர்களையும் பள்ளி இறுதி ஆண்டு வரை படிக்க வசதி செய்து தந்தார்.  

1996- ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரி, மாவட்டங்கள் தோறும் நான்கைந்து தொழில்நுட்பக் கல்லூரி, மூன்று கிலோமீட்டருக்குள் தொடக்கப்பள்ளிகள், ஐந்து கிலோ மீட்டருக்குள் உயர்நிலைப் பள்ளிகள், 10 கிலோமீட்டரக்குள்  மேல்நிலைப் பள்ளிகள்,10 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு கலை கல்லூரி -என தமிழ்நாட்டை கல்விச்சாலைகள் நிறைந்த சோலையாக மாற்றினார்.  

அத்துடன் தகவல் தொழில்நுட்பத்திற்கு என்றே தனியானதொரு சட்டம் இயற்றி சென்னையில் டைடல் பார்க் என்ற கணினி தொழில்நுட்ப பூங்காவை அமைத்தார். இந்த தொழில்நுட்ப பூங்காவில், தமிழ்நாட்டின் கல்விச் சோலைகளில் இருந்து புறப்பட்ட கல்லூரி பறவைகள் அனைத்தும் பறந்து வந்து தங்கள் கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றார்கள். 

 2006ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வியை இலவசமாக்கினார். 

 இதனால் 1990 ஆம் ஆண்டு இலவச பஸ் பாஸ் பெற்று தனது ஆரம்ப பள்ளியின் கல்வியை கற்க ஆரம்பித்த ஒரு மாணவன் அங்கு இலவச பாடப் புத்தங்கள், சத்துணவுகள், ஸ்காலர்ஷீப் உதவிகள் என அரசின் பொறுப்பில் கல்வி கற்று, 2007 ஆம் ஆண்டு கல்லூரிக்குள் நுழையும் போது, அவன் முதல் தலைமுறை பட்டதாரி எனில், அந்தக் கல்லூரிப் படிப்பின் கட்டணங்கள் மானிய அடிப்படையில் குறைக்கப்பட்டது. அதே மாணவன் மிகவும் பின் தங்கிய பிரிவில் இருந்து வரும் போது கல்லூரிக் கல்வி முற்றிலும் இலவசமாக தரப்பட்டது. 

கல்விக்காக இத்தனை வசதிகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை. ஏன் ? ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த அளவுக்கு கல்வி இலவசமாக தரப்படவில்லை.  

இதனால்தான் தமிழ் நாட்டில்  
பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக் கல்விக்குச் செல்லும் GER எனும் ரேட்டிங் 50% க்கு மேல் உள்ளது. ஆனால், இந்தியாவின் சராசரி GER ரேட்டிங் 27% சதவீதம் மட்டுமே.  

 *திராவிடம் வெல்லட்டும் !*

🌈 

@வண்ணப்பலகை

🌹🏃‍♂️

முகநூல் பகிர்வு

Comments