வணக்கம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நலமா நண்பர்களே?
இந்த இரண்டாயிரத்து இருபத்தி ஐந்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைப் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல பல்வேறு பணிகளில் ஈடுபட, குறிப்பாக சொந்த இல்லம் ஒன்றை எழுப்பும் பணியில் சந்தித்த அனுபவங்கள், துயர்கள், இணையர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் கொஞ்சம் கரைந்தன.
இந்த இடைவெளியில் வீதியில், விதைக்கலாமில், ரோட்டரியில் கூடுதலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன்.
நிறைய, அனுபவங்கள்,
கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ஒன்று இக்கணத்தில் மனதில் மின்னுகிறது.
கூடு திரும்புதல் எளிதன்று....
பல அனுபவங்களுக்கு பிறகு கூடு திரும்பியிருக்கிறேன்.
தொடர்வோம்
அன்பன்
மது
(கஸ்தூரி ரெங்கன் )
Comments
Post a Comment
வருக வருக