இணையர் மைதிலியின் கவிதைத் தொகுப்பு வெளிவந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.
மகிழ்வைப் பகிர்கிறேன்.
துவக்கத்திலிருந்தே ஆர்வமூட்டி வந்த அண்ணன் நிலவன், கவிமூலத்தை உருவாக்கிய அண்ணா ரவி அய்யா, தொகுப்பை வெளியிட்டே ஆகவேண்டும் என்று வெளியிடவைத்த யாழி கிரிதரன், வெளியீட்டில் உறுதுணையாக இருந்த ரேவதி ராம், கீதாஞ்சலி மஞ்சன், பிழை திருத்தம் செய்த இ.பு.ஞானபிரகாசன் என ஒரு பெரிய நட்பு பட்டியல் இந்த நிகழ்வை சாத்தியமாக்கியது.
தமிழ் பண்பாட்டு வரலாற்றின் மிக முக்கியமான மையமாக இருக்கும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், இந்த நூல் வெளியிடப்பட காரணமாக இருந்த அய்யா ஆர். பாலகிருஷ்ணன் என்றென்றும் எங்கள் நன்றிக்கு உரியவர்.
அருமை நண்பர் இ.ஞானப்பிரகாசன் பகிர்த்திருக்கும் சில படங்கள் ...
Comments
Post a Comment
வருக வருக