மேரி கோம் குத்துச்சண்டையின் ராணி - MC மேரி கோம்

பாங்காக் சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்ற பிறகு. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா நகரில் 2001 ம் ஆண்டில் நவம்பர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள நான் அழைக்கப்பட்டேன். இது சர்வதேச குத்துச்சண்டை அமைப்பினால் நடத்தப்படுகிறது. முன்னர் இது சர்வதேச அமைச்சூர் குத்துச்சண்டை சம்மேளனம் என்று அறியப்பட்டது. 

என் அப்பாவினால் இந்த போட்டிக்காக வெறும் ₹20,000 மட்டும் தான் சேகரித்து தர முடிந்தது. எனக்கு மிகுந்த மன துயரும் கவலையும் ஏற்பட்டது, அமெரிக்காவில் சின்ன சின்ன விஷயங்கள்  கூட எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் என் பெற்றோராலோ என்னாலோ ஏதும் செய்ய முடியாது. என் நண்பர் ஆன்லருடன் நான் இது குறித்து பேசினேன். ஆன்லர் நண்பர்களையும் சில பெரியோர்களை அழைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பணம் திரட்டுவது என்று முடிவு செய்தான். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தலா 5000 மற்றும் 3000 ரூபாய்களை கொடுத்தார்கள். திடிரென இப்போது என் கையில் பத்தாயிரம் ரூபாய்கள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய தொகையுடனும், இன்னும் சில தெரிந்தவர்கள் கொடுத்த பணத்தையும் வைத்துக்கொண்டு நான் அமெரிக்காவுக்கு புறப்பட்டேன். என் பையில் பணம் இருந்தது எனக்கு மிக நிம்மதியை கொடுத்தது, எனக்காக இத்தனை அக்கறை எடுத்து பணியாற்றிய நண்பர்களை சந்திக்க நான் வெறும் கையுடன் திரும்ப வரக்கூடாது என்பதையும் அது நினைவூட்டியது.

பென்சில்வெனியா நகரம் குளிராகவும், அழகானதாகவும் இருந்தது. பணி பெய்து கொண்டிருந்தது. நாங்கள் விளையாட்டு போட்டி நடந்த அரங்கிற்குள் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டாலும், கண்ணில் தென்பட்ட சிறிதளவு நகரமே அழகாக தெரிந்தது. பென்சில் வேனியர்கள் ரொம்ப பெரிய மனதுக்காரர்கள். 
சொல்லப்போனால் என் வாழ்க்கையின் முதல்முறையாக அவ்வளவு நீண்ட தூரத்தை நான் பயணம் செய்து கடந்திருந்தேன். எனக்கு அமெரிக்கா எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல். ஆனால் நாங்கள்தான் கடைசியாக வந்து இறங்கிய போட்டியாளர்களின் குழு என்பதால் விமான நிலையத்திலிருந்துநேரடியாக போட்டிகள் நடைபெறும் அரங்கிற்கு சென்று விட்டோம்.  மற்ற குழுக்கள் எல்லாம் ஏற்கனவே தங்களுடைய எடையை உறுதி செய்து விட்டார்கள், ஒவ்வொரு வீரருக்கும் அது மிகவும் அவசியமானதும், கட்டாயமானதும் ஆகும். நான் கலைப்பாகவும் ஜெட் லாகினால் துயருற்றும் இருந்தேன். இந்தியாவில் நான் புறப்படும்போது காலைப் பொழுது, நான் இறங்கிய பொழுதும் காலை பொழுதாகவே இருந்தது. எடை பார்க்கப்பட்ட பிறகு எனக்கு அன்று ஏதும் போட்டிகள் இல்லை என்பதை அறிந்தேன். நான் அதிர்ஷ்டக்காரி ஆனால் இந்த அதிர்ஷ்டம் என் குழுவில் வந்த மற்ற போட்டியாளர்களில் சிலருக்கு இல்லை. போதுமான அளவு ஓய்வெடுத்து அதற்குப் பிறகு என் எதிர் போட்டியாளரை சந்தித்து எளிதாக வீழ்த்த முடிந்தது. புதிய போட்டியாளர்களை சந்தித்து மோத வேண்டும் என்கிற என்னுடைய பயம் மிக விரைவாக காணாமல் போய்விட்டது. இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் 48 கிலோ பிரிவில் நான் பங்கேற்றேன். என்னுடைய குழுவில் இருந்த சக போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தோற்க நான் இறுதிப் போட்டிகளை நோக்கி முன்னேறினேன். தங்கப் பதக்கத்தை கூட வென்று விடலாம் என்று தான் நினைத்தேன். எதிரே மோதும் குத்துச்சண்டை வீரர்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று தான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன். 

அந்த இடமும் அந்த போட்டியும் என்னுடைய வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று நான் நம்பினேன். ரிங்குக்குள் நிற்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் என்னால் யாரையும் எதிர்த்து சண்டை செய்ய முடியும். கால் இறுதி போட்டியில் நான் போலந்தை சேர்ந்த நாடியா வோப்பியை ஆர்எஸ்சி (நடுவரால் நிறுத்தப்பட்ட போட்டி) என்கிற அடிப்படையில் வென்று விட்டேன். ஒரு குத்துச்சண்டை போட்டியில் ஒரு போட்டியாளர் தொடர்ந்து தாக்கப்பட்டு காயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலை அடைந்து விடுவார் என்று நடுவர் கருதினால் அந்த போட்டியை நிறுத்திவிட்டு காயப்படுத்தியவரை வெற்றியாளராக அறிவிக்கலாம் என்பதுதான் ஆர் எஸ் சி . அரை இறுதிப் போட்டிகளில் நான் கனடாவை சேர்ந்த ஜிமி பெஹாலை 21 புள்ளிகளுக்கு 9 என்கிற விகிதத்தில் வென்றேன்.. இறுதிச்சுற்றில் நான் தடுக்கியைச் சேர்ந்த கூலா ஷாகின் இடம் தோற்றுவிட்டேன் 13க்கு 5 என்கிற புள்ளி அடிப்படையில் .

எனக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்தது என்னுடைய பசியின்மைதான். அமெரிக்காவின் உணவுகளுக்கு நான் பழகவில்லை. எவ்வளவு முயன்றும் அந்த உணவுகளை நான் உட்கொள்ள முடியவில்லை. எனது எடை குறைய ஆரம்பித்தது. எவ்வளவு தூரம் நான் என் எடை இழந்தேன் என்றால் இறுதி சுற்றுக்கு முன்னால் 46 கிலோ கிராம் மட்டுமே நான் இருந்தேன். இதுதான் நான் தங்கம் வெல்வதை தடை செய்த விஷயம். நான் மிகவும் மனமுடைந்து போனேன். என் அறைக்குச் சென்று கதறி அழுதேன்.. ஆனால் என்னுடைய பயிற்சியாளர்கள் கருணைமிக்கவர்கள், என்னை புகழ்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக என்னை பாராட்டினார்கள். மொத்த குழுவிலும் நான் ஒருத்தி மட்டும் தான் பதக்கம் வென்றிருந்தேன்.. இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால் என்னுடைய மன உறுதி, யாரை வேண்டாலும் எதிர்கொள்ளலாம், வெல்லலாம் என்கிற மன உறுதியை எனக்குத் தந்தது இந்த போட்டி தான். 

என்னுடைய பந்தயப் போட்டிகளுக்கான பயணத்தில் பல விஷயங்களை நான் பழகிக் கொண்டேன், பல்வேறு நாடுகளின் பழக்கவழக்கங்கள். நடைமுறைகளை தெரிந்து கொண்டேன். சைனாவுக்கு சென்று இருந்தபோது அவர்கள் இரண்டு குச்சிகளை கொடுத்து அதன் மூலம் உணவு எடுத்து உண்ண சொன்னார்கள். அப்போதுதான் ஒரு ஸ்பூனையும் போர்க்கையும் வைத்து எப்படி வயிற்றை நிரப்புவது என்று கற்றுக் கொண்டிருந்தேன் இருந்திருந்த வாக்கில் திடுமென இரண்டு குச்சிகளை கொடுத்து சாப்பிடு என்றால் என்ன செய்வது. இரண்டு குச்சிகளையும் இரண்டு கைகளில் பற்றிக் கொண்டு உணவை எடுத்து உள்ளே செலுத்த ஆரம்பித்தேன். என்னுடைய குழு நண்பர்கள் ஸ்பூன்களைக் கேட்டார்கள் ஆனால் நான் குச்சிகளை வைத்து சமாளிக்க கற்றுக் கொண்டேன். சைன உணவுகளை ரசிக்கவும் ருசிக்கவும் அது உதவியாக இருந்தது. அதைவிட நான் கடும் பசியில் இருந்ததால் எப்படி அந்த குச்சிகளை பிடித்து சாப்பிடுவது என்ற சிக்கலான நடைமுறைகளை நான் பயின்று கொண்டேன். எனக்கு போதுமான அளவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டேன். ஐந்து ஆண்டு பயணத்திற்கு பிறகு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டேன். 

நான் திரும்ப வந்த பொழுது டெல்லி ஏர்போர்ட்டில் எனக்கு ஒரு மகிழ்வான வரவேற்பு கிடைத்தது. எனக்கு வாழ்த்துகளும், மேளதாளங்களும். நடனங்களோடு கூடிய வரவேற்பும் கிடைத்தது. நகரின் குறுக்காக ஒரு வெற்றி ஊர்வலம் நிகழ்ந்தது. நகரின் அதிகாரிகள் வாழும் பகுதியான லாங்கோலில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடந்தன, புகழ்ச்சியும் பாராட்டும் என்மீது மழைபோல் பொழியப்பட்டன. மரபார்ந்த ஒரு சால்வை எனக்கு வழங்கப்பட்டது. ஓஜா இ பேச்சாவும் என்னுடன் இருந்தார் அவருக்கும் புகழ் மாலை சூடப்பட்டது.  லாங்கோல் குடியிருப்பு மக்களிடம் நான் பேசும்பொழுது  சொன்னேன் வரும் காலத்தில் நான் தங்கத்தை வெல்லும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது என .

நான் வென்ற அந்த முதல் வெள்ளி பதக்கம் எனக்கு எப்போதுமே மிக முக்கியமானது. அந்தச் சண்டையும் அதை தொடர்ந்த விஷயங்களும் என் நினைவு அடுக்குகளில் செதுக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆழ் மனதில் எனக்கு வெள்ளிப் பதக்கம் திருப்திகரமாக இல்லை. இந்திய மண்ணை தொட்டவுடன் அடுத்த முறை நிச்சயமாக தங்கத்தை வென்று கொண்டு வருவேன் என்கிற உறுதியை நான் எடுத்துக் கொண்டேன். எனக்கு தெரியும், என்னால் முடியும் என்று. 

பென்சில் வேனியாவில் நான் வென்ற அந்த வெள்ளிப் பதக்கமும், அரசு எனக்கு வழங்கிய பரிசுத்தொகையும் என்னுடைய உடனடி பொருளாதார தொல்லைகளிலிருந்து விடுபட உதவியது. ஆனால் எனக்கு ஒரு வேலையும் வேண்டும், அது மட்டுமே எனக்கு நீண்ட கால பாதுகாப்பையும் நிரந்தரமான வருமானத்தையும் தரும். மேலும் அப்போதுதான் எனக்கு திருமணமாக இருந்தது, என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை இருந்ததெல்லாம் சில உயிர் காப்பீட்டு பத்திரங்கள்தான். எனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான் தங்கம் வென்ற பொழுது மணிப்பூர் அரசு எனக்கு காவல்துறையில் துணை ஆய்வாளர் பதவியை வழங்கியது. 2005 ஆம் ஆண்டு அதை நான் ஏற்றுக் கொண்டேன். மிக நீண்ட காலமாக ஒரு அரசுப் பணியை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாவின் மூலம் பெற வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ஒரு வழியாக அது நிறைவேறியது. முதல் முதலில் எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் 15,000 ரூபாய்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்தால் எங்களுடைய ஏனைய சக ஊழியர்களைப் போல நாங்கள் பணிக்குச் செல்ல வேண்டாம். ஏனெனில் நாங்கள் போட்டிக்கான பயிற்சியிலோ, வெகு தொலைவிலோ நடைபெறும் இன்னொரு போட்டியிலோ பங்கேற்றுக் கொண்டிருப்போம். தேவையான பொழுது அலுவலகத்திற்கு போனால் போதும். எப்போதெல்லாம் நான் அலுவலகத்தை விட்டு செல்கிறேனோ அப்போதெல்லாம் ஒரு விடுப்பு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்றால் போதும். 

நான் மெடல்களை வாரி சுருட்டுவது என் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தது. என்னை சுற்றி இருந்தோர் திருமணத்திற்கு பிறகு நான் ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன் என்று சொன்னதைப் பொய்யாக்கி விட்டேன். 2005 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டில் இருக்கும் பொடல்ஸ்க் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உலக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மூன்றாவது முறையும் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டேன். 
சரிதா வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார், எனக்கு ஒரு கதாநாயகிக்கு உரிய வரவேற்பை இம்பால் ஏர்போர்ட்டில் கொடுத்தார்கள். எங்களை பாகிச்சந்திரா திறந்தவெளி அரங்கிற்கு அழைத்துச் சென்று மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தார்கள்.  

2001 ஆம் ஆண்டு துவங்கி 2004 ஆம் ஆண்டு வரை என்னுடைய ஓட்டம் மிக நன்றாக இருந்தது. பல தங்க பதக்கங்களை  வென்றேன்.. குறிப்பாக எல்லா பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் எல்லா சீனியர் பதக்கங்களையும் நான் வென்றிருந்தேன்.. 2002ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி, 2003 ஆம் ஆண்டு ஐசர் நகரில் நடைபெற்ற ஆசிய பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம், ஹங்கேரியின் பேஸ் என்ற நகரில் நடைபெற்ற விச் கப் பாக்ஸிங்ல் சாம்பியன்ஷிப்பில். வென்று இருந்தேன். இத்தனை சாதனைகளுக்குப் பிறகும் என்னுடைய சாதனை ஓட்டம் திருமணத்திற்குப் பிறகு தொடருமா என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. திருமணத்துக்கு பிறகு தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற நான்காவது உலக சாம்பியன் போட்டிகளையும் .2006 நவம்பரில் நடைபெற்ற ஐந்தாவது உலக சாம்பியன் போட்டிகளையும் நான் வென்றேன்.. 

அதேபோல நிறைய சர்வதேச சேம்பியன்ஷிப் பட்டங்களையும் நான் வென்றேன், தைவானில், வியட்னாமில் : டென்மார்க்கில் இன்னும் பல நகர்களில் . என்னுடைய ஆகப்பெரும் சாதனையாக நான் நினைப்பது  2006 இல் புதுடில்லியில் நடைபெற்ற நான்காவது உலக சாம்பியன் போட்டியில் என்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை ரோமானியாவை சேர்ந்த ஸ்டுலூட்டா டுட்டா வைத்  22 க்கு 7 புள்ளிகள் என்கிற விகிதத்தில் தோற்கடித்து தக்க வைத்துக் கொண்டதுதான்.  அந்த வெற்றி என்றென்றும் என் மனதில் மாபெரும் வெற்றியாக பதிந்து போயிருக்கிறது ஏனென்றால் அந்த வெற்றி என் தாய் மண்ணில் எனக்கு கிடைத்த வெற்றி. ஏனைய இந்திய குத்துச்சண்டை வீரர்களும் மிக அற்புதமாக போட்டியிட்டார்கள். இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கல பதக்கங்களையும் வென்று மிகச் சிறந்த அணி என்கிற பட்டத்தையும் பெற்றது. உலக சாம்பியன் பட்டத்தை மூன்று முறையும் வென்றதற்காக பத்திரிகைகள் என்னை குத்துச்சண்டை ராணி என்று அழைக்க துவங்கினர் : அற்புதமான மேரி என்றும் அழைத்தார்கள்

Comments