கணிப்பொறி விளையாட்டுகள்

பிஸி மேனைப்  பின்பற்றி வந்த பாக் மேன் விளையாட்டு 


கணிப்பொறி யுத்தத்தின் குழந்தை, கணினி தொடர்பான பல விஷயங்கள் யுத்தத்தினால் மேம்பட்டிருக்கின்றன, குறிப்பாக ஆர்பா நெட் என்று அமெரிக்க இராணுவம் துவங்கிய கணிப்பொறி வலைப்பின்னலே இணையமானது.

எதிரி நாடுகளின் சங்கேத செய்திகளை புரிந்துகொள்ள, கடுமையான கணக்கீடுகளைச் செய்ய மட்டுமே கணிப்பொறிகள் பயன்படும் என்று நினைத்திருந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள், கணிப்பொறி விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா?

தகவல் தரவுகளை தரும் விசைப்பலகை, மவுஸ், ஜாய் ஸ்டிக் போன்ற சாதனங்களாலேயே விளையாட்டுகளையும் விளையாட முடியும்.

தொண்ணூறுகளில்  முதல் முதலில் கணிப்பொறிக்கு நான் அறிமுகமான பொழுது ஆபீஸ் மென்பொருளுக்கு முந்தய காலம், லோட்டஸ் என்கிற எலெக்ட்ரானிக் ஸ்ப்ரெட் ஷீட்  புழக்கத்தில் இருந்தது. 

அந்த தினங்களில் முதலில் அறிமுகமான கணிப்பொறி விளையாட்டு பி.சி.மேன்.

இன்றுபோல அன்றைய கணிப்பொறிகளில் ஸ்பீக்கர்கள் இருக்காது, உங்கள் கணிப்பொறியில் இசை வேண்டும் என்றால் நீங்கள் அதற்கென சவுண்ட் பிளாஸ்டர் என்கிற ஒரு கார்டை வாங்கி மதர்போர்டில் சொருக வேண்டும். 

ஆனால் பிஸி.மேன் விளையாட்டு மிக எளிதான ஒரு செயலாக்க நிரல். 
ஒரு புதிர் வழியில் உங்களைத் துரத்தி விழுங்கும் கணிப்பொறி வில்லன்களிடமிருந்து  நீங்கள் தப்ப வேண்டும். 

 ஒரு வட்ட வடிவத்தை விசைப்பலகையில் உள்ள அம்புக்குறிகளை  கொண்டு நகர்த்தி தப்ப வேண்டும். 

வெகு எளிமையான விளையாட்டு இது. 

நீங்கள் விளையாட விரும்பினால் இந்த இணைப்பை முயற்சிக்கலாம். 

இதற்கு பிறகு பேக் மேன் என்று மேம்பட்ட வடிவில் ஒரு வெர்ஷன் வந்தது. 

இதுதான் நான் விளையாடிய முதல் கணிப்பொறி விளையாட்டு.

தொடர்வோம்.

அன்பன் 
மது 


Comments