ஈ வே ரா பெரியார்

#Shared_post   
*💥🖤🔥எப்போதோ இறந்துபோன பெரியார்*
*இப்போதும்*
*ஏன் தொடர்ந்து* *தாக்கப்படுகிறார்.... ?*

*நீங்கள்* 
*என்றாவது* *சிந்தித்ததுண்டா.?*

*தேர்தல் களத்தில்* 
*எம்ஜிஆர்,* *ஜெயலலிதா,* *விஜய் போல்*  
*பெரியார்* *மக்களிடத்தில்* 
*ஒரு வசீகரத் தலைவரும் இல்லை...*

*இன்னும் சொல்லப்போனால்..*
*பெரும்பாலான* 
*வாக்காளர்களுக்குப் பெரியாரை* 
*யார் என்றே தெரியாது.*

*அரைகுறை படிப்பாளிகளுக்குக்கூட*
*அவர் ஒரு கடவுள் மறுப்பாளர்*
*என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது.*

*இப்படி இருந்தும்* 
*பெரியார் ஏன்* *இப்போது*
*தொடர்ந்து* *தாக்குதலுக்கு* 
*உள்ளாக்கப்* *படுகிறார்... ?*

*இது சித்தாந்தம் தொடர்பான* 
*ஒரு மறைமுகப் போர்.*

*ஏழாம் அறிவு படத்தில்* 
*டாங்லி யோட*
*கண்களால்* *கட்டுப்படுத்த முடியாத* 
*ஒருவர் ( சூரியா) வரும்போது* 
*டாங்லியின் குரு சொல்வார்,* 

*"அங்கே இருக்காதே*
*அது போதி தர்மர் மண்* 
*உடனே கிளம்பி விடு" என்று.*

*அப்படித்தான்....*

*இந்தியாவில்* 
*எந்த ஒரு* *மாநிலத்தின் அரசியலையும்* 
*வளைக்கக் கூடிய சக்திவாய்ந்த* 
*ஓர் இயக்கம், ஓர் அரசியல் கட்சி* 

*தேர்தல்* *அரசியலில்* 
*நோட்டாவோடு* *போட்டிப் போடுவது* 
*இந்த மண்ணில் மட்டும்தான்.*

*பெரியார் யாரென்று* 
*உங்களுக்குத்* *தெரியாமல் இருக்கலாம்.*

*ஆனால்...*

*இந்திய விடுதலையின்போது* 
*பின்தங்கிய மாநிலமாக இருந்த* 
*தமிழ்நாட்டை ...* 

*ஒரு முன்னேறிய மாநிலமாக* 
*மாற்றுவதற்கு உதவிய ...*

*காமராசர்..* 
*அண்ணா..* 
*கருணாநிதி..* 
*எம்ஜிஆர்..* 
*ஜெயலலிதா..* 

*என்று எல்லா* *முதல்வர்களுக்கும்* 
*பெரியார்* *யாரென்று நன்றாகவே தெரியும்.*

*அந்த முதல்வர்களின் கொள்கைத் தலைவர் பெரியார்தான் என்பதும்* 
*அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு* *வெளிப்படையான உண்மை.*

*காங்கிரஸ்* 
*திமுக* 
*அதிமுக* 
*கட்சிகள் மட்டும்* *அல்லாமல்...!*

*மதிமுக* 
*தேமுதிக*
*பாமக* 
*விசிக* 
*மக்கள் நீதி மய்யம்*

*இப்போது உருவான*
*விஜய் கட்சியான* 
*தவெக வரை*

*தங்கள் கட்சியின்* 
*கொள்கைத் தலைவராக* 
*விரும்பி ஏற்றுக் கொண்ட* 
*ஒரே தலைவர் பெரியார்தான்.*

*பெரியாரியம் என்பது* 
*வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் ...*

*நீங்கள் இன்னும் சிந்திக்கத்* *தொடங்கவில்லை என்று பொருள்.*

*பெரியாரியம் என்பது*
*எல்லார்க்கும்* *எல்லாம் என்பதான*
*ஒரு சமத்துவ ,* *சமதர்ம சித்தாந்தம்.*

*நடுவண் அரசின் பட்ஜெட்டில்*

*தமிழ்நாட்டை விட* 
*அதிகநிதி* *ஒதுக்கியும்...* 

*வட மாநிலங்கள்* 
*முன்னேறாமல்* *இருப்பதற்குக்* *காரணம் என்ன.?*

*அங்கே* 
*சித்தாந்தம்* *மாறாமல் வளர்ச்சி இருக்காது* *என்பதை நீங்கள்* 
*ஆழமாக* *யோசிக்காமல் புரிந்து கொள்ள முடியாது.*

*அங்கே* 
*ஏழைகளுக்கு ஒதுக்கும் நிதி* 
*ஏழைகளுக்குப் போய்ச் சேராது.*
*சேரவும் விட மாட்டார்கள்.*

*தொடர்ந்து* 
*ஏழைகளாக இருப்பது* 
*தங்கள் தலைவிதி என்று தலைவிதியை நம்புகிற கூட்டம் அங்கே அதிகம்.*

*இங்கே அப்படி இல்லை.*

*ஏன் என்று கேள்வி கேட்கும் கூட்டம்* 
*இங்கே அதிகம்.*

*நமது தமிழ் மண்ணில்* 
*சாதி, மத, ஆண் -பெண் வேறுபாடு* 
*என்று எந்த உயர்வு தாழ்வுக்கும்* 
*இடமில்லை.*

*கண் போலக் காக்கும் பயிரில்* 
*களையும் இருப்பது போல* 
*இங்கே சில குறைகளும் உண்டு.*

*களைகள் அவ்வப்போது* 
*களையப் படுகிறது.*

*ஆனால்....*

*பெரியாரிய சிந்தனைகளுக்கு எதிராக அவர்கள் கட்டமைக்க நினைக்கும் சித்தாந்தம் என்ன.?*

*உங்களிடம் ஒன்று கேட்கிறேன்*
*பெரியார் வேண்டாம்* 
*பெரியாரிசம் வேண்டாம்..*

*சரி...!*

*அதற்குப் பதிலாக* 
*நீங்கள் கட்டமைக்க விரும்பும்* 
*கொள்கை எது..?*

*உங்களால்*
*அதுபற்றி* *விவாதிக்க முடியுமா..?*

*அல்லது* 
*உங்களைப்* *பின்புலத்தில் இருந்து* 
*மறைமுகமாக இயக்குபவர்கள்..!*

*வெளிப்படையாக வெளியேவந்து* 

*தமிழ்நாட்டில் பெரியாரியத்துக்குப் பதிலாக* *அவர்கள் அமைக்க விரும்பும்* 
*அந்த சித்தாந்தம் எது என்று வெளிப்படையாகக் கூற முடியுமா..?*
*முடியாது.*

*உலகில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை.* 

*தமிழ்நாட்டில் பெரியாரியத்தை வெளியேற்ற* *நினைப்பவர்கள்*  
*அதற்குப் பதிலாக* 

*எந்த சித்தாந்தம் இங்கே வரவேண்டும் என்கிற தகவலையும் வெளியிடுங்கள்.* 

*பெரியார் தனிமனிதர் இல்லை.*

*யாதும் ஊரே* *யாவரும் கேளிர்..* 
*என்று கூறிய* *கணியன் பூங்குன்றன்..* 

*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்* 
*என்று கூறிய திருவள்ளுவர்..* 

*மதமெனும் பேய் என்னைப்* *பிடியாதிருக்க வேண்டும்* 
*என்று கூறிய வள்ளலார்..* 

*இந்தத் தமிழ்ப் பாராம்பரியத்தின்* *கடைசி முகம்தான் பெரியார்.*

*முகம் இல்லாமல்* 
*முகவரி இல்லை..!*

*எது உங்கள் முகம்... ?🔥💥🖤💥*

Comments