பிம்பினிரோ ...இரத்தமும்_எண்ணையும் 2024
வெனிசூலாவின் பெட்ரோலிய கடத்தல்காரர்கள் வாழ்வைத் தழுவிய படம். 2010இல் கொலம்பியா மற்றும் வெனிஸூலாவில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களின் கற்பனைத் தழுவல்.
வறுமையை விரட்ட இப்படி ஒரு வாழ்வை தேர்ந்தெடுக்கும் மூன்று சகோதரர்களின் கதை. இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட குடும்பத்தினரின் மருத்துவ செலவு ஒரு காரணமாக இருக்கிறது.
ஏரியா டான்கள் இந்த கடத்தலை கைப்பற்ற மிக கொடூரமான வழிமுறைகளை மேற்கொள்ள, படம் இந்த புள்ளியிலிருந்து திருப்பங்கள் நிறைந்த ஒரு கதையாக விரிகிறது.
படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், வெனிசூலாவின் நிலப்பரப்பு, சப்பாத்தி கள்ளிகள், அற்புதமான ஓளிப்பதிவு.
காதலுக்காக நரகத்தின் அடர் தீக்குள் குதிக்கும் மனத்திண்மை கொண்ட நாயகி, அவளது அழகான முகம். ஹாலிவுட் படங்களில் பார்த்து பார்த்து சலித்த முகங்களைத் தாண்டி ஒரு புது வரிசை நடிகர்கள் என்பதே எனக்கு பெரும் ஆறுதல்.
நல்ல படம்தான், ஆனால் குடும்பத்தோடு பார்க்க ஏற்றது அல்ல.
வெனிசூலாவின் நிலப்பரப்பை, லாங் ஷாட்டில் சாலையே இல்லாத பெரும் மணற்பரப்பில் விரையும் கார்களை பார்ப்பது நல்லொதொரு காட்சி அனுபவம்.
அமேசான் பிரேமில் இருக்கு
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக