எங்க அப்பத்தா எல்லா அப்பத்தாவையும் போலயே ஒரு வயசான அப்பத்தா தான். எனக்குத் தெரிந்த 20 வருஷமும் அவங்க வயசாயித்தான் இருந்தாங்க சுருக்கம் விழுந்த மூஞ்சியோடதான் இருந்தாங்க. ஆனா எல்லாரும் சொன்னாங்க ஒரு காலத்துல அவங்க ரொம்ப அழகா இருந்தாங்க, அவங்களுக்கு ஒரு ஹஸ்பண்ட்கூட இருந்தாங்கன்னு ஆனா என்னால் அதை நம்ப முடியல. எங்க தாத்தாவோட படம் வரவேற்பு அறையில், கணப்பு அடுப்பின் அலங்காரமான மேற்கூரைக்கு அருகே தொங்கிக்கிட்டு இருக்கும். பெரிய முண்டாசும் தெளதொளன்னு சட்டையும் போட்டிருப்பார். அவரோட நீளமான வெண்தாடி கிட்டத்தட்ட அவருடைய முழுமார்பையும் மறைத்திருக்கும். அவர பார்த்தா குறைஞ்சபட்சம் 100 வயசு இருக்கும்னு தோணும். மத்தவங்கள போல அவருக்கு பொண்டாட்டி புள்ளை எல்லாம் இருக்குன்னு தோணாது. அவரு தோற்றத்தை வச்சு பார்த்தோம்னா அவருக்கு பேரப்பிள்ளைகள் மட்டுமே இருக்கும்னு தோணும். அதுவும் நிறைய பேரப்பிள்ளைகள். எங்க அப்பத்தாவை இளமையாக அழகாக கற்பனை செய்து பார்க்கிறதே ஒரு பெரிய ரகளை தான்.
அவங்க எங்கள்ட்ட சின்ன வயசுல அவங்க விளையாடின விளையாட்டை பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அந்த விளையாட்கள் எல்லாமே ரொம்ப முட்டாள்தனமாகவும் கௌரவ குறைச்சலாகவும், அப்பத்தா சொன்ன தீர்க்கதரிசிகளின் கற்பனைக் கதைகள் போல .திராபையாக இருந்தன.
அப்பத்தா எப்போதுமே குண்டா குட்டட்டின்னு இருந்தாங்க, லைட்டா கூன் வேற விழுந்திருச்சு. முகத்தில் குறுக்க மருக்க சுருக்கமா இருந்துச்சு. எனக்கு உறுதியாக தெரியும் அவங்க எப்பவுமே இப்படித்தான் இருந்திருக்கணும். அவங்களுக்கு வயசு ஆயிருச்சு பயங்கரமா வயசு ஆயிடுச்சு அதுக்கு மேல வயசாக முடியாது. அதனால 20 வருஷமா அப்படியே இருக்காங்க. அவங்க எப்போதும் முக அழகாக இருக்கவே முடியாது, ஆனால் அகம் அழகு.
அவங்க எப்போதும் வளைந்து போன இடுப்பு ஒரு கையால புடிச்சுக்கிட்டு வீட்டைச் சுத்தி தடுமாறித் தடுமாறி நடப்பாங்க, இன்னொரு கையில ஜெபமாலை வைத்து உருட்டிக்கிட்டு மந்திரம் சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அவங்களோட வெள்ளி முடி கலைஞ்சு, சுருக்கம் விழுந்து எப்போதும் எரிச்சலாக இருக்கக்கூடிய அவங்க மூஞ்சில விழுந்துட்டே இருக்கும். சதா சர்வ காலமும் அவங்க உதடுகள் பிரார்த்தனையை முணுமுணுத்தபடியே இருக்கும். இப்படி ஒரு அழகு அப்பத்தா. மலைகளின் குளிர்பனி காலம் போல இருந்தாங்க, விரிந்து பரந்த வெள்ளைப் பேரமைதி, மனத்திருப்தியையும் அமைதியையும் மலை சுவாசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாக அப்பத்தா.
நானும் எங்க அவங்களும் நல்ல நண்பர்கள் . எங்க அம்மாவும் அப்பாவும் பக்கத்துல இருந்த நகரத்திற்கு பணி நிமித்தமாக சென்ற பொழுது நானும் அவுகளும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். ஒவ்வொரு நாள் காலையிலும் என்னை அப்பத்தாதான் எழுப்பி பள்ளிக்கு தயார் செய்து விடுவாங்க.
என்னை குளிப்பாட்டும் பொழுதும் தயார் செய்யும் பொழுதும் ஒரு பிரார்த்தனை பாடலை முனங்கிக் கொண்டே தயார் செய்வார். இப்படி செய்வதால் எனக்கு அந்த பாடல்கள் எல்லாம் மனப்பாடம் ஆகிவிடும் என்பது அவுக நம்பிக்கை. எனக்கு அப்பத்தாவின் குரல் பிடித்திருந்ததால் மட்டுமே அந்த பாடலை கேட்டேன் மற்றபடி அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எல்லாம் என்னிடம் இல்லை. இதற்குப் பிறகு என்னுடைய மரத்தால் ஆன எழுதும் பலகையை கொடுப்பாக. ஒவ்வொரு நாளும் அந்த எழுது பலகையில் மஞ்சள் பூசி தருவாங்க. அதனோடு கூடவே ஒரு மண்ணால் ஆன இங்க் பாட்டில் மற்றும் சிவப்பு பேனா. இவை எல்லாவற்றையும் ஒரு பொட்டலமாக கட்டி என்னிடம் கொடுப்பார். காலை சாப்பாட்டிற்கு தடிமனான கொஞ்சம் ஊசிப் போன சப்பாத்தி மீது வெண்ணை தடவி கொஞ்சம் சர்க்கரையை பரப்பித் " தருவாங்க.
இதன் பிறகு நாங்கள் பள்ளிக்கு புறப்படுவோம் கூடவே பாட்டி ஊசிப்போன பல சப்பாத்திகளை கிராமத்தின் நாய்களுக்கு போடுவதற்காக எடுத்து வருவாள்.
என் அப்பத்தா எப்போதும் என்னுடன் பள்ளிக்கு வருவாங்க, ஏனென்றால் பள்ளியே ஒரு கோவிலின் வளாகத்தில் தான் இருந்தது. கோவில் பூசாரி எங்களுக்கு எழுத்துக்களையும் காலைப் பிரார்த்தனையையும் பயிற்றுவித்தார். கோவில் வராண்டாவில் இருபுறமும் குழந்தைகள் அமர்ந்து எழுத்துக்களை பாடியும் பிரார்த்தனை பாடல்களை பாடியும் கொண்டிருந்த பொழுது எங்கள் அப்பத்தா கோவிலுக்குள்ளே இருந்து புனித நூல்களின் பக்கங்களை படித்துக் கொண்டிருப்பாங்க. நாங்கள் இருவரும் எங்கள் வேலையை முடித்ததற்கு பிறகு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிப்போம். இப்போது கிராமத்தில் இருக்கும் எல்லா நாயும் கோவில் கதவருகே எங்களுக்காக காத்திருக்கும். எங்கள் வீடு வரை அவைகள் ஒருவரோடு ஒருவர் குலைத்த படி, சண்டை போட்டபடி நாங்கள் எரியும் சப்பாத்திகளுக்காக பின் தொடரும்.
எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து டவுன்ல செட்டிலான உடன எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்க நட்புல அப்பதான் ஒரு பெரிய திருப்பு முனை நடந்தது. நாங்க ஒரே அறையில் தங்கி இருந்தாலும் பள்ளிக்கு வர்றத அப்பத்தா நிறுத்திட்டாங்க. நான் ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு, பள்ளி பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தேன். நகரத்தின் தெருகளில் நாய்கள் இல்லாததால் அப்பத்தா வீட்டின் வெளிப்பகுதியில் சிட்டுக்குருவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
வருடங்கள் உருண்டோடவும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது குறைந்து கொண்டே போனது. சில நாட்களுக்கு என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி பள்ளிக்கு தயார் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். நான் பள்ளியில் இருந்து திரும்பியவுடன் இன்னைக்கு பள்ளிக்கூடத்துல வாத்தியார் உனக்கு என்ன நடத்தினார்கள் என்று கேட்பார். நான் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளும் ஐரோப்பிய அறிவியல் தரவுகளையும் அவர்களிடம் சொல்வேன். புவியீர்ப்பு விசை, ஆர்க்கியுமிடிசின் தத்துவம். உலகம் உருண்டையா இருப்பது குறித்து எல்லாம் சொல்வேன். இந்த தகவல்கள் அவுகள வருத்தம் அடையச் செய்தன. அப்பத்தாவால் எனக்கு படிப்பதில் உதவ முடியவில்லை. அப்பத்தாவிற்கு ஐரோப்பிய பள்ளிக்கூடங்கள் சொல்லித் தரும் விஷயங்களில் நம்பிக்கை இல்லை அதோடு கூடவே கடவுள் குறித்த, வேதம் குறித்த எந்த பாடங்களும் இல்லை என்பது அவங்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் நான் அவங்கள்ட்ட சொன்னேன், எனக்கு இசை வகுப்புகள் எல்லாம் நடக்கின்றன தெரியுமா. அப்பத்தா எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தாக. அந்த அமைதிக்கு பொருள் எனக்கு இது நல்லதாக படவில்லை என்பதுதான். இதற்குப் பின் வெகு அரிதாகவே அப்பத்தா என்னிடம் பேசினார்.
நான் பல்கலை கழகத்திற்கு சென்ற பொழுது எனக்கென ஒரு தனி அறை கொடுக்கப்பட்டது. எங்களுக்குள் இறைந்த நட்பு சங்கிலி அறுபட்டது. கைவிடப்பட்ட மனநிலையோடு இந்த பிரிவை ஏற்றுக்கொண்டார் அப்பத்தா. இதன் பின்னர் அவர்களுடைய கைராட்டையை விட்டு எழுந்து வந்து யாரிடம் பேசுவது அரிதாகி போனது. சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை தன்னுடைய கைராட்டையில் அமர்ந்து நூல் நூற்பதையும் மந்திரங்களை உச்சாடனம் செய்வதிலும் பொழுதை கழித்தார். மதிய நேரம் மட்டும் சிறிது நேரம் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிப்பதன் மூலம் ரிலாக்ஸ் செய்து கொண்டார்.
மதிய வேளையில் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொண்டிருக்கும் அப்பத்தாவை சுற்றி ஆயிரக்கணக்கில் சிட்டுக்குருவிகள் கூடி கீச்சீச் என்று சத்தம் எழுப்பி ஒரு பெரும் குழப்பத்தையும், கூச்சலையும் ஏற்படுத்தின. சில சிட்டுக்குருவிகள் அவளுடைய தொடைகளிலும், சில அவளுடைய தோள்களிலும், இன்னும் சில அவங்க தலையிலும் அமர்ந்திருந்தன. அப்பத்தா சிரித்துக்கொண்டாங்களே ஒழிய அவற்றை விரட்டவில்லை. அந்த அரை மணி நேரம்தான் ஒவ்வொரு நாளும் அப்பத்தா மகிழ்வோடு இருக்கும் நேரம்.
மேற்படிப்புக்காக நான் வெளிநாட்டுக்கு செல்ல நேர்ந்த போது, எனக்குத் தெரிந்து இருந்தது அது எவ்வளவு தூரம் என் அப்பத்தாவை புண்படுத்தும் என்பது.
ஐந்து ஆண்டுகள் நான் படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும், அப்பத்தான் இருக்கும் நிலையில் எதையும் சொல்வதற்கு இல்லை.
ஆனால் அப்பத்தாவல் முடிந்தது, கொஞ்சம் கூட சென்டிமென்ட் இல்லாமல் அனுமதித்தாங்க. என்னை வழி அனுப்ப ரயில் நிலையத்திற்கு கூட வந்தாங்க.. ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை எந்த உணர்ச்சியும் இல்லை. அவள் உதடு பிரார்த்தனையினால் அசைந்து கொண்டு இருந்தது,மணமக மனமோ பிரார்த்தனையில் கரைந்து போயிருந்தது. அவங்க விரல்கள் ஜெபமாலை உருட்டிய வண்ணம் இருந்தன. அமைதியாக என் முன் நெற்றியில் முத்தமிட்டாங்க. நான் புறப்பட்ட பொழுது அந்த முத்தத்தின் ஈரத்தை கொண்டாடினேன். ஒருவேளை அதுதான் எங்களுக்கு இடையேயான கடைசிச் தொடுதலாகக் கூட இருக்கும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் திரும்பி வந்த அன்று ரயில் நிலையத்திற்கே வந்து வரவேற்றார். ஒரு நாள் கூட வயது கூடியதாக தெரியவில்லை. இப்போதும் அவங்களுக்கு பேசுவதற்கு நேரமில்லை, என் கரங்களைப் பற்றிக் கொண்ட பொழுது அவர் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். நான் திரும்ப வந்த முதல் நாளில் கூட அவருடைய மகிழ்ச்சியான பொழுது என்பது சிட்டுக்குருவிகளுக்கு உணவு அளிக்கும் அந்த அரை மணி நேரமாகத் தான் இருந்தது. இப்போது உணவளிக்கும் நேரத்தின் அளவு கூடியிருந்தது அதோடு அப்பத்தா அந்த சிட்டுக்குருவிகளை திட்டிய வண்ணம் உணவளித்து கொண்டிருந்தார்..
மாலைப்பொழுதில் ஒரு மாற்றம் அவரிடம் வந்திருந்தது:அவர் பிரார்த்திக்கவில்லை. அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த பெண்களை அழைத்து, வீட்டில் இருந்த ஒரு சிறிய பறையை எடுத்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். பல காலமா வார் பிடிக்கப்படாது தளர்வுற்றிருந்த அந்த பறையை அடித்துக் கொண்டு வீடு திரும்பும் வீரர்களுக்கான பாடலை பாடிக்கொண்டே இருந்தார்.
நாங்கள் உடலை வருத்திக் கொண்டது போதும், பாடியது போதும் நிறுத்துங்கள் என்று அவரை கெஞ்சினோம். என் சிறு பிராயத்தில் இருந்து அந்த நாள் அந்த நிமிடம்தான் ஒரு சிறிய பிரார்த்தனையை கூட செய்யாமல் எங்கள் அப்பத்தா இருந்த நேரத்தை நான் பார்த்தேன்.
மறுநாள் காலை அப்பத்தாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சின்ன காய்ச்சல் தான் சரியாயிடும் என்றார் மருத்துவர். ஆனால் என்னுடைய அப்பத்தா வேறு மாதிரி நினைத்து வைத்திருந்தார். என்னுடைய அந்திமம் வந்துவிட்டது என்று சொன்னார். என்னுடைய இறுதி நிமிடங்களில் நான் பிரார்த்திக்காமல் இருந்து விட்டேன் என் வாழ்வு பூரணத்துவம் அடையும் இந்த நேரத்தில் உங்களுடன் பேசி மேலும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தார்.
நாங்கள் இதை எதிர்த்தோம், அப்பத்தா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய கட்டிலில் அமைதியாக படுத்துக்கொண்டு ஜெபமாலை உருட்ட தொடங்கினார். என்ன ஏது என்று நாங்கள் உணர்வதற்கு முன்னால் அவளுடைய உதடுகள் அசைவின்றி நிற்க கைகளில் இருந்து நழுவி விழுந்தது அந்த ஜெபமாலை. அமைதியான திகிலூட்டும் வெண்மை அவங்கள் முகத்தில் படர்ந்தது விடைபெற்று விட்டார் என்று எங்களுக்கு புரிந்தது.
எங்கள் வழக்கப்படி கட்டிலில் இருந்து அவரை எடுத்து தரையில் கிடத்தி செந்நிற துணி கொண்டு அவர் உடலை மூடினோம். சில மணி நேரங்கள் துக்கம் அனுசரித்த பிறகு அவருடைய இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகளை செய்தோம். அன்று மாலை அவசரத்தில் செய்யப்பட்ட ஒரு பாடையை எடுத்துக்கொண்டு அவள் அரைத்துச் சென்று அவர் உடலை கிடத்தி இறுதி ஊர்வலத்திற்கு தயார் செய்தோம். சூரியன் அஸ்தமனமாக துவங்கி இருந்ததால் செந்நிற கதிர்கள் வராண்டாவிலும் அப்பத்தாவின் அறையிலும் பாய்ந்து தங்க நிறத்தில் ஒளியூட்டிக் கொண்டிருந்தன. வீட்டின் வெளியே இரண்டு அடி தான் வைத்திருப்போம் அப்படியே நின்று விட்டோம், அப்பத்தா கடத்தப்பட்ட இடம், வராண்டா, வீட்டின் வெளி முற்றம் எல்லாம் சிட்டுக்குருவிகள், ஆயிரக்கணக்கில், கலைந்து கலைந்து அமர்ந்திருந்தன. ஒரு குருவி கூட ஓசை எழுப்பவில்லை. நாங்கள் அந்த குருவிகளுக்காய் இறங்கினோம். என் தாயார் குருவிகளுக்கு சில துண்டு ரொட்டிகளை எடுத்து அப்பத்தா சிறு சிறு துளிகளாக அவற்றை நொறுக்கி போடுவது போலவே நொறுக்கி வீசினார். சிட்டுக்குருவிகள் அவற்றை சீந்தக் கூட இல்லை. எங்கள் அப்பத்தாவின் உடலை நாங்கள் சுமந்து செல்ல துவங்கியவுடன் ஆயிரம் சிட்டுக்குருவிகளும் அமைதியாக பறந்து சென்று விட்டன. மறுநாள் காலை வெளிமுற்றம்மெங்கும் வீசி எறியப்பட்ட ரொட்டி துண்டுகளின் துகள்களை எங்கள் வேலைக்காரி கூட்டித்தள்ளினார்.
Comments
Post a Comment
வருக வருக