ரெபல் மூன் இரண்டாம் பாகம் தழும்பை தருபவள்


கணிப்பொறி விளையாட்டுகள்தான் ஹாலிவுட்டுக்கு இப்போது புதிய களம்.
1997இல் வெளிவந்த ரெபல் மூன் எனும் கணிப்பொறி விளையாட்டின் கதைதான் இப்போது ஸாக் சிண்டரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ரெபல் மூன் ஒன்று மற்றும் இரண்டாம் பாகம். 

கடந்த பாகத்தில் அதிகார வெறிபிடித்த ஒரு போர் வெறி தளபதியின் வளர்ப்பு மகள்  அவனிடமிருந்து தப்பி பிரபஞ்சத்தின் வேறு எல்லையில் இருக்கும் ஒரு கிரகத்தில் பதுங்கி வாழ்ந்து வருகிறாள். 

எதிர்பார்த்தது போலவே தளபதியின் அடியாட்கள் இந்த கிரகத்தை ஆக்கிரமிக்க, ஒரு களேபரம், அதைதொடர்ந்து கதாநாயகிக்கு ஒரு புதிய அணி, இவர்கள் தங்கள் பலத்தால் அப்பாவி மக்களை பாதுக்காக்க முன்வருகிறார்கள். 

இந்த புள்ளியில் முடிந்திருந்த முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் எடுத்த எடுப்பில் அதிரடியாக தொடர்கிறது...

எபிக் கிலாஸ்  (epic clash) என்று சொல்லும் புள்ளியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கதாநாயகியின் குழு அழிக்கப்படுகிறது. இன்னும் சில எதிர்பாராத திருப்பங்களோடு இந்தபாகமும் நிறைவுக்கு வருகிறது.

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று மனிதர்களை போலவே செயல்படும் ரோபாட், இந்த ரோபாட்டுக்கு குரல் கொடுத்தவர் ஆந்தனி ஹாப்கின்ஸ், நடிப்பு அசுரன், இதில் குரல் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். மனிதர்களைப்போலவே குற்றவுணர்வில் சிக்கி, ஓர் பாசமான  தொடுதலில் உயிர் பூக்கும், இளம் பெண் ஒருத்தியின் கற்பை காக்கும், மனிதர்களோடு ஒட்ட முடியாமல் ஒதுங்கி வாழும் ரோபாட் இந்த தொடரின் அசத்தலான பலம். 


இது  அதிகம் விருப்பப்பட்டால் நிச்சயம் அடுத்த பாகமும் வரும். 

இல்லை என்றால் காணாமல் போகும். 

அறிவியல் புனைவுகளை விரும்பிப்  பார்க்கும் இளம் தலைமுறைக்கு இந்தப்படம் உவப்பாக இருக்கும். நெட்பிளிக்சில் கிடைக்கிறது. 

Comments