ஆனால் முடிந்தவரை விறு விருப்பாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
அடியாட்களிலில் அஸாஸின் என்ற வகையுண்டு. கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பெருந்தலைகளை போட்டுத் தள்ளும் வகை.
அதிலும் தொழில் நேர்த்தி, தாங்கள் செய்த கொலையை விபத்தாக காண்பிப்பதில் கில்லாடிகள்.
இப்படமும் அஸாஸின் ஒருவனின் கதைதான். தெறிக்கும் இரத்தம் இப்போது காமடியாக மாறியிருப்பது படத்தைப் பார்த்தால் தெரிகிறது.
சில காட்சிகளில் உள்ளுறுப்புகள் சிதறிக் கிடக்கின்றன.
அடாப்ஸி கிளாஸாடா எடுக்கிறீங்க?
என்று கதறத் தோன்றுகிறது.
ஹீரோ டேவ் பாடிஸ்டா இப்படி கிளாஸா நடிப்பார் என்பது ஒரு வாவ்.
ஹீரோயின் சோபியா பெடுல்லா, முகத்தில் உணர்வுகளை காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார்.
சோபியா, ரிபெல் மூன் தொடரில் முகத்தில் ஆழமான சோகத்தில் இருப்பார், வேறு எந்த உணர்வுகளும் இருக்காது. ஆத்திரப்பட்டால் கூட ஆழமான சோக கோபம், காதல் வயப்பட்டால் ஆழமான சோக காதல் என்று நம்மை நோகடித்தவர் இந்தப்படத்தில் வாவ்.
ஒரு தபா பாக்கலம்
அமேசான் பிரைமில்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக