பாதால் லோக் என்கிற வெப் தொடர் முதல் பாகத்திலேயே முத்திரையை பதித்து விட்டது.
சனியன் பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கிற பொழுது இவர்கள் எல்லாம் எப்போது பாதாள லோக் போன்ற ஒரு விஷயத்தை செய்யப் போகிறார்கள் என்கிற எரிச்சல் மிகுந்த கேள்வி மனதில் எழும்.
இது அறியாமையின் கேள்விதான்.
சின்னத்திரை தொடர்களில் இயங்கும் நண்பர்களிடம் இதுகுறித்து பேசிய பொழுது பளிச்சென்று அவர்கள் சொன்ன ஒரே விஷயம் பட்ஜெட்.
வெப் தொடர்கள் ஒரு முழு நீள திரைப்படத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டை பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் வெப் சீரிஸ்களை தொலைக்காட்சி தொடர்கள் தொடக்கூட முடியாது என்பதுதான் எதார்த்தம்.
முதல் பாகம் கற்பனைகளோடு செய்து பார்க்க முடியாத விஷயங்களை திரையில் விரித்தது.
இரண்டாவது பாகம் அந்த அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும் மிக நன்றாகத்தான் இருக்கிறது.
இன்ஸ்பெக்டர் சவுத்ரி, நேர்மையான போர்க்குணம் மிக்க ஒரு காவல் அதிகாரி.
இவர் எப்படி அமைப்பால் துவைத்து எடுக்கப்படுகிறார் என்பது கதை.
வழக்கமான எட்டு எபிசோட்களைக் கொண்ட சீசன்.
வெற்றிகரமான ஆங்கில வெப் தொடர்களைப் போலவே எதிர்பாராத நேரத்தில் மிக முக்கியமாக பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட கதாபாத்திரங்களை போட்டு தள்ளி விடுகிறார்கள்.
அடேய், ஏன்டா இப்படி பண்றீங்க என்று சொல்கிற அளவில் இருக்கிறது.
அவசியம் பார்க்க வேண்டிய தொடர்களில் ஒன்று.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக