அமெரிக்க இலக்கியத்தின் அதி உன்னத படைப்புகளில் ஒன்று ஹார்பர் லி எழுதிய டு கில் ஏ மார்க்கிங் பேர்ட்.
பென் ஹெர் படத்தின் பிரம்மாண்டம் வென்றதற்கு காரணம் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் உணர்வு கொந்தளிப்பை, துரோகத்தை, கல்வாரிமலை பயணத்தோடு இணைத்து சொல்லியிருந்த விதம்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை டு கில் மாக்கிங் பேர்ட் ஆங்கிலத் திரைப்படங்களின் உச்சத்திலும் உச்சம்.
ஒரு பெண் குழந்தையின் பார்வையில் விரிகின்ற கதையாகட்டும், நேர்மை பெறாத அவரது தந்தையாகட்டும், என்னதான் விரோதமும் வண்ணமும் நிறைந்த சமூகமாக இருந்தாலும் குழந்தைகளின் முன்னிலையில் துப்பாக்கிகளை கீழே போடும் பண்பாகட்டும்
சான்சே இல்லாத ஒரு படம்.
மிக நீண்ட நாட்களுக்கு இந்தப் படத்தை குறித்து எதுவும் எழுதக்கூடாது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான அற்புத அனுபவம்.
திரைப்படம் எனக்கு பிடிக்கும், அல்லது நல்ல படம் நான் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.
Comments
Post a Comment
வருக வருக