ஒரு நிகழ்வுக்கான செயல்பாடுகள் என்பது ஒன்றன்பின் ஒன்றாக செயல்வடிவம் பெறக்கூடியவை. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு படிகளாகக் கடந்து தற்போது குழந்தைகளின் அறிமுகம் வரை வந்தடைத்திருக்கிறது.
என்றோ ஒரு நண்பர்களுடனான உரையாடல் ஒன்றில்,"சரியான புத்தகம் சரியான கைகளில் தானாக சென்றடையுமென்றால், அந்தக் கைகளின் உரிமையாளர் அறிவு தளத்தில் நடத்த விருக்கும் ஆச்சரியங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் குறிப்பாக அவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் எதிர்காலத்தோடு இணைத்து சிந்திக்க வேண்டியச் சூழலும் ஏற்பட்டு விடுகிறது." எனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அப்படியான ஆச்சரியங்கள் ஒவ்வொரு நிலத்திலும் நிகழ்வதைப் போலவே, இம்முறை நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கிறதுதான்.
புதுகோட்டை வந்த முதல்நாளே கிடைத்த ஆச்சரியம்தான் கலையரசி. அதேபோல் அவராக தேர்ந்தெடுத்தப் புத்தகம் மேற்கொண்டு கண்கள் விரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவற்றையெல்லாம்விட, இந்த இரண்டு வாரங்களில் இருமுறை சந்தித்து விட்டேன்.
புத்தகத்தில் அவர், தனக்கு பிடித்தப் பகுதி எனச் சொல்லியிருக்கும் விசயங்கள் பெரும் ஆச்சரியம்.
ஒவ்வொருமுறையும் நான் உணரும் ஆச்சரியங்களை அனைவரும் உணரலாம்.
#குழந்தைகளுக்கான_கலை_இலக்கியக்_கொண்டாட்டம்_புதுக்கோட்டை
#பிப்_22
#இனியன்
Comments
Post a Comment
வருக வருக