மலையாளத் திரைப்படங்கள் குறித்து வியந்தோதும் ஒரு பெரும் நண்பர் கூட்டம் எனக்கு உண்டு.
எனக்கு கவிதைகளை அறிமுகம் செய்த மருது சங்கர் துவங்கி மலையப்பன் வரை நிறைய நண்பர்கள் மலையாள படங்கள் குறித்து மகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்கள்.
நமக்கு பிடித்ததெல்லாம் மூனாம் முறா, CBI டைரி குறிப்பு போன்ற படங்கள்தான்.
மற்றபடி மலையாள படங்களை பார்ப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன்.
இணையர் அமேசான் பிரைமில் கதா இன்னுவர என்கிற படத்தை பார்க்க துவங்கியிருந்தார்.
அவரோடு சேர்ந்து நானும் பார்த்தேன்.
அரண்டு போய்விட்டேன்.
சேட்டன்கள் அசத்திவிடுகிறார்கள்.
படம் குறித்து விரிவாக எழுதி நீங்கள் பார்க்கும் அனுபவத்தை கெடுத்து விட விரும்பவில்லை.
முக்கியமான படங்களில் ஒன்று.
கதையினூடே தேவதாரு என் மனத் தாழ்வறைகளில் பூத்தது என்கிற அசத்தலான பாடலைக் கேட்டேன்.
இப்போதைக்கு முணுமுணுக்கும் பாடல்களில் ஒன்று இது,
கேட்கும் பொழுது ஒரு நேர்மறை அதிர்வை தருகிற பாடல்.
வாய்ப்பு இருப்போர் பார்த்து மகிழலாம்
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக