மத நல்லிணக்க பேரணிreligious harmony

ஒரு பெரும் மத நல்லிணக்க பேரணி திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசால் உடனே நடத்தப்பட வேண்டும்:
Dr.ச.தெட்சிணாமூர்த்தி

"நம்மை ஒன்றாய் சேர்க்கும் காரணிகளை அணைத்துக் கொள்வோம்.
நம்மைப் பிரிக்கும் காரணிகளை தூர வைப்போம்" 

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்றே பண்படுத்தப்பட்ட நம் தமிழ் மண்ணில் திருப்பரங்குன்றம் போன்றதொரு நிகழ்வுக்கு வாய்பளித்திருக்கவே கூடாது.

   திருப்பரங்குன்றம் விஷயத்தைப் பொறுத்தவரை 1947 ஆம் ஆண்டு இந்திய வழிபாட்டு உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதாவது 1947 வரை ஒரு வழிபாட்டு தலத்தில் எந்த மத அடிப்படையில் வழிபாடு நடைபெற்ற தோ அதே நடைமுறையே சுதந்திரத்திற்கு பிறகும் தொடர வேண்டும். எந்த காரணம் கொண்டும் அதை மாற்றக்கூடாது என்பதே அந்தச் சட்டத்தின் கூறு. திருப்பரங்குன்றத்தில் இரண்டு  மதங்களின் வழிபாட்டு உரிமைகளும் அரசாங்கத்தால் மத நல்லிணக்க அடிப்படையில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் இதில் எனக்கு என்ன பெரிய ஆச்சரியம் என்றால், கவலை என்றால்

40 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது

விவசாயிகள் தொடர்ச்சியாக பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை உரிமை (MSP) வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்பதை, இந்த பட்ஜெட்டில் கூட அரசு நிறைவேற்ற வில்லை

நீட் விலக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

 மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை கூட எடுத்துக்காட்டாய் சமையல் கேஸ் விலை கூட முன்பை விட பல மடங்கு உயர்ந்து விட்டது.

இப்படிப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு போராட்டம் என்று அறிவித்தான் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மக்கள் கூடுகிறார்கள்.

ஆனால் அவர்களது மத உணர்வை கொழுந்து விட்டு எறிய செய்து விட்டால் லட்சக்கணக்காய் கூடி விடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது கவலையும் அச்சமும் நேற்று எனக்கு ஏற்பட்டது.

மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் மனிதர்களோடு, இயக்கங்களோடு மக்கள் நிற்க வேண்டும்.

மத உணர்வுகளை மத வெறியாக மாற்றிவிட்டு அதில் குளிர்காய நினைத்தும், விஷ மனிதர்களை விட்டு மக்கள் குறிப்பாக தமிழர்கள் விலகியே இருக்க வேண்டும் என்ற கவலையும் என் மனதிலே எழுகிறது..

  தமிழக அரசு உடனே குன்றக்குடி அடிகளார், இசுலாமிய பெரியவர்கள், கிறித்தவ பெரியவர்கள் உள்ளிட்டோர் கொண்ட ஒரு பெரும் மத நல்லிணக்க பேரணியை உடனே திருப்பரங்குன்றத்தில் நடத்த வேண்டும்!

"மனுசனே பெருசு "

-Dr.ச.தெட்சிணாமூர்த்தி

Comments