பொங்கும் போக்ஸோ

தமிழ் அறிஞர் ஒருவரின் பதிவை பகிர்கிறேன்

( ஆசிரியர்களின் மீது கூறப்படும்  99.9 %  சதவீத   பாலியல்  குற்றச்சாட்டுகள் பொய்யானவை., போலியானவை.., பல்வேறு காரணங்களுக்காக ( கடன் பிரச்சினை, சங்க பிரச்சனை, சாதி பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சினை, போட்டி,  பொறாமை போன்ற  பல... )  பழிவாங்குவதற்காக  மாணவிகள்  மூலமாக  பாலியல் புகார்களை உருவாக்கி  அவற்றை  சமூகவலைத்தளங்களில்  ( FACEBOOK, TWITTER, WHATSAPP, YOUTUBE )  பரப்புகிறார்கள்...)

ஒருவர் ஒரு சிறிய அளவு புகழ்பெற்றாலே  பலருக்கு  வயிற்றெரிச்சல்  வந்துவிடும்.. பழிவாங்க துடிப்பார்கள்.. விதவிதமாக முயற்சிப்பார்கள்.. ஒரு சிறிய  பேனை  பெருச்சாளி  ஆக்குவார்கள்... ⚠️

*எனவே  எதையும்  நம்பாதீர்கள்...* ❌⚠️

மாநிலம் முழுவதும் ஆங்காங்கே *ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்* சார்ந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

*பாலியல் சார்ந்த  உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.* 

எனினும் 
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான உறவு என்பது கற்றல் கற்பித்தல் உடன் நின்றுவிடாமல் *ஒழுக்கம் சார்ந்த* கண்டிப்பையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய 
கைபேசி இணைய  உலகத்தில் படிப்பைத் தவிர மற்ற பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களின் மனம் அலைந்து கொண்டிருத்தலும்,

*மதிப்பெண்* இருந்தால்
*மட்டுமே* கல்லூரியில் 
இடம் கிடைக்கும் என்கின்ற சூழல் இல்லாமல்
*எந்த மதிப்பெண் எடுத்தாலும்* ஏதாவது 
*ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்* என்கின்ற நிலை இருப்பதாலும்,

கடந்த தலைமுறையான *கண்டிப்பான பெற்றோர்களிடம்* குழந்தைகளாக வளர்ந்து இன்றைய பெற்றோர்களாக இருக்கும் தலைமுறையினர் தாங்கள் பட்ட கட்டுப்பாடுகளை *தங்கள் குழந்தைகள்  படக் கூடாது* என்கின்ற 
மனநிலையில் *பெற்றோர்களும்* இருப்பதாலும்,

படிப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடையங்களில் *கட்டுப்பாடுகள் இன்றி* இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.

முதன்மை கல்வி *அலுவலர் தேர்ச்சி சதவீதம் உயர்த்த சொல்கிறார் என்றோ* 
அல்லது 
*நீங்கள் வளர்ந்த சூழலை மனதில் வைத்து* இன்றைய மாணவர் இடத்தில் நடந்து கொண்டாலோ
*அதைக் கூட சிக்கலாக்கிவிடும்* வாய்ப்பு உள்ளது. 

எனவே
மேற்கண்ட சூழல்களில்  இன்றை காலகட்டம் இருப்பதால்
ஆசிரியர்கள் *மிகுந்த உச்சபட்ச எச்சரிக்கையுடன்* மாணவர்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் விட  *மானமும், கௌரவமும்* 
முக்கியமானது.

ஏனெனில் 
அரசும்,சட்டமும் இன்றைய சமூக ஊடகங்களும் உங்களை வீழ்த்த மட்டுமே கூட்டம் கூட்டமாக வரும்.

என்பதை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


 *தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள்:-* 


1.ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் முதல் 
கடை நிலை ஊழியர்கள் வரை *ஈகோ இல்லாமல்* ,
 *பணித் தொகுதி பாரபட்சம் பார்க்காமல்*  ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

2.ஆசிரியர்களுக்கிடையேயான போட்டிகளை தீர்க்க (தனிப்பட்ட விடயங்களுக்காக) சாதி, மதம், உள்ளூர் என ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு மற்றோர் *ஆசிரியருக்கு எதிராக தூண்டி விடுதல்* , போன்ற எதிர்மறையான சிந்தனைகளை *முற்றிலும்* தவிர்க்க வேண்டும்.

3.ஒரு ஆசிரியருக்கு எதிராக உண்மைக்கு புறம்பான சிக்கல் வரும் போது மற்ற *அனைத்து ஆசிரியர்களும் துணையாக* நிற்க வேண்டும்.

4.பெண்கள் பள்ளிகளில்
ஆய்வகம், வகுப்பறைகள் உட்பட எந்தவொரு சூழலிலும் *மாணவிகளை தனியாக சந்திக்கும் சூழலை* முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குறைந்த பட்சம் *மூன்று அல்லது அதற்கு அதிகமான* எண்ணிக்கையில் மாணவிகளை சந்திக்க சொல்லி அறிவுரை வழங்கி விடவும்.

5.இருபாலர் பள்ளியில் மாணவர்கள் உடன் வைத்துக் கொள்ளவும், ஆய்வகங்களுக்கு *முதலில் மாணவர்களும் இரண்டாவதாக மாணவிகளும் உள்ளே வர வேண்டும்* என்றும்,
வெளியேறும் போது *முதலில் மாணவிகள் வெளியேற வேண்டும் இரண்டாவதாக மாணவர்கள் வெளியேற வேண்டும்* போன்ற பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும்.

*கவனமாக இருப்போம்*
*கற்பித்தலை மேம்படுத்துவோம்...*

Comments