கணிப்பொறி விளையாட்டு -பிரின்ஸ் ஆஃப் பெர்சியா

பர்சனல் கம்ப்யூட்டர்கள் வந்த புதிதில் அநேகமாக உலகெங்கும் உள்ள பயனர்களால் விளையாடப்பட்ட ஒரு கணிப்பொறி விளையாட்டு பிரின்ஸ் ஆஃப் பெர்சியா. 1989இல் வெளிவந்த விளையாட்டு இது. நான் விளையாட ஆரம்பித்தது 1996இல்.

வழக்கமான அலிபாபா கதை தான். 
ஒரு அரேபிய மன்னனைத் தன் மந்திரத்தால் வசியம் செய்து சிறைபிடித்து அவளது மகளை மணப்பதன் மூலம் அரசைக் கைப்பற்ற நினைக்கிறான் மந்திரவாதி ஒருவன். 

ஆனால் இளவரசியின் இதயமோ 
 இன்னொருவன் வசம் இருக்கிறது. 

இதுதான் இந்த கணிப்பொறி விளையாட்டின் கதைச்சுருக்கம். 

இளவரசியின் காதலன் பல்வேறு பொறிகளையும், தடைகளையும் தாண்டி மந்திரவாதியைக் கொன்றுவிட்டு இளவரசியை மணக்க வேண்டும். 

இளம் வயதில் இந்த விளையாட்டை ஆடுவது கிளர்வூட்டும் ஒரு அனுபவமாக இருந்தது.

2 எம் பி ராம், 40 ஜிபி ஹார்டு டிஸ்க் என ரொம்பவே எளிமையான கணிப்பொறிகளில் விளையாட முடியும். 

பிற்பாடு இந்த விளையாட்டை நிரலாக்கம் செய்த பொறியாளரின் பேட்டியைக் காண நேர்ந்தது.  திறன் குன்றிய கணிப்பொறிகளில் இதைப் போன்ற ஒரு விளையாட்டை நிழலாக்கம் செய்வது  எத்துண சவால் மிக்கது என்பது புரிந்தது. சொல்லப்போனால் ஜோர்டான் மிஷனர் என்கிற நிரலாக்கர் இந்த விளையாட்டின் மூல வரிகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் 2011 இல் வெளியிட்டு விட்டார்

இந்த விளையாட்டின் அனிமேஷன் எப்படி சூட் செய்யப்பட்டது என்பதின் காணொளி ஒன்றை இங்கே பாருங்கள்.

கமாண்ட் லைனில் பிரின்ஸ் மெகா ஹிட் இன்று தட்டச்சு செய்தால் காட் மோட் ஓபன் ஆகிவிடும். 

நல்ல விளையாட்டுகளில் ஒன்று. 

தொடர்வோம் 
அன்பன் 
மது


Comments