தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கடைவீதியில் இன்று (24.02.2025) செய்தியாளர் இல தர்மராஜா என்பவர் சென்று கொண்டிருந்த போது, அவரது பார்வையில், பாதையில் கிடந்த பணக்கட்டு ஒன்று பட்டது.
பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டு. பென்னாகரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமிகு மகாலட்சுமி அவர்களிடம் அந்தப்பணம் ரூ 50 ஆயிரத்தை ஒப்படைத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட காவல் துறை பென்னாகரம் கடைவீதியில் விசாரணை மேற்கொண்டது.
இதில் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்த அருண்குமார்(27), அவரது அவசரச் செலவுக்காக வங்கியில் நகையை அடகு வைத்து, பணம் பெற்றுச் செல்லும் போது, தவற விட்டது கண்டறியப்பட்டது.
பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி, அருண்குமாரை அழைத்து பணத்தை ஒப்படைத்தார்.
கண்டெடுத்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த
தர்ம ராஜாவுக்கும் அது பெரிய தொகைதான்
அவர் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்.
அவரது தந்தை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, முன்னணித் தலைவராக திகழ்ந்தவர். கம்யூனிஸ்டு கட்சியில் தடுமாற்றம் இல்லாமல், கொள்கை நெறியுடன் வாழ்ந்து வரும் புரட்சியாளர்.
தற்போது உடல் நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வருபவர்.
இவரது மகனான இல தர்மராஜா செய்தியாளராக ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்..
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு உறுப்பினர் மற்றும் பென்னாகரம் நகரத் துணைச் செயலாளர் பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார்
கம்யூனிஸ்டுகள் நேர்மை குறித்து பேசுபவர்கள் மட்டும் அல்லாமல், வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள்..
சுடு மணலில் விழுந்த புழுப்போல வறுமையில் வாழ்ந்தாலும் நேர்மையில் இமயம் போல் உயர்ந்து நிற்பதை இயல்பாகக் கொண்டவர்கள் என்பதை தர்மராஜ் நிரூபித்திருக்கிறார்
தோழருக்கு வாழ்த்துகள்
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர்.முத்தரசன் பதிவு
Comments
Post a Comment
வருக வருக