புஷ்கர் காயத்ரி இரட்டையர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர் சுழல்.
பார்த்திபன், பரியேறும் பெருமாள் கதிர், மக்கள் செல்வி ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி என வெயிட்டான என்சாம்பில் காஸ்ட்.
தொடரின் அடிநாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்.
கொஞ்சம் அசைந்தாலும் கையை கிழித்து விடும் கண்ணாடி துண்டு ஒன்றை கையாள்வது போல புஷ்கரும் காயத்ரியும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
இன்னொரு விஷயத்திலும் அவர்கள் கவனமாக இருந்திருக்கலாம். பாலியல் குற்றவாளியின் புகைப்படத்தை குளோசப் காண்பித்து பேன் அவுட் ஆகிற பொழுது பின்னணியில் மார்க்ஸின் படம்.
அவர்களை அறியாமலே இதை செய்தார்களா அல்லது திட்டமிட்ட நகர்வா என்பது தெரியவில்லை.
மதவெறி பரப்பு ஊரின் படம் அங்கு இருந்திருந்தால் தொடர் வெள்ளியாவதிலேயே சிக்கல் இருந்திருக்கும்.
இது ஒன்று மட்டும்தான் எனக்கு உறுத்தலாக தெரிந்தது.
மற்றபடி தொடர் ரொம்ப கிரிப்பிங்காக இருந்தது.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக