கேப்டன் அமெரிக்கா எ பிரேவ் நியூ வேர்ல்ட்

மார்வெல் யுனிவர்சல் இருந்து இன்னொரு படம்

மார்வலைப் பொருத்தவரை படம் ஓடுகிறதோ இல்லையோ புதிய புதிய பாகங்களை எடுத்து தள்ளி கொண்டே இருப்பார்கள்.

மிகுந்த காத்திருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பின்னர் வந்த கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் அப்படி ஒரு படம்தான்.

ஆண்டனி மாகி இந்தப் படத்தில் கேப்டன் அமெரிக்காவாக வருகிறார்.

திரையரங்குகளில் வெளியாகாமல், தொலைக்காட்சி தொடர்களில் வந்த கதைகளை ஊடும் பாவுமாக இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஸ்டீவ் ராஜருக்கு முன்பே அமெரிக்காவின் முதல் கேப்டன் அமெரிக்காவாக இருந்தது ஒரு ஆப்பிரிக்க வம்சாவளி ராணுவ வீரர்.

இவருடைய பின்னணி சற்று மர்மமாக இருக்க அதில் ஒரு பயணம் சென்று எதிர்பாராத சில திருப்பங்களை ஏற்படுத்தி விரிகிறது கதை.

புதிய  விடோ, புதிய ஃபால்கன்,  அறிமுகத்திற்காக இந்த படம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

படம் சிற்சில பின்னடைவுகளோடு இருந்தாலும் வசூலில் சாதித்து இருக்கிறது. இவ்வாண்டு இதுவரை வெளிவந்த படங்களில் அதிகம் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.


மார்வெல் ரசிகர்கள் கொண்டாடிப் பார்ப்பார்கள்.

தொடர்வோம்
அண்பன்
மது







Comments