அமேசான் ஓ டி டியில் சீசனுக்கு பிறகு சீசனாக வெளியாக்கிக் கொண்டிருப்பது இந்தத் தொடர்.
என்டர்பிரைஸ் விண்கலத்தை மிகச் சிறப்பாக இயக்கி பல சாகசங்கள் புரிந்த பிக்கார்டு ஒரு பெரிய பண்ணை வீட்டில் தனது ஓய்வு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
அவரை தேடி வருகிறாள் ஒரு பெண்.
தொடரும் சம்பவங்கள் தான் திரைப்படமாக விரிகிறது.
பொதுவாகவே எனக்கு ஸ்டார் ஸ்ட்ரக் ரொம்ப பிடிக்கும்.
டெலிபொர்ட்டேஷன் சீக்வன்ஸ் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.
இந்த வகைமை திரைப்படங்களில் இப்படி ஒளித் துகள்களாக மாறி மனிதர்கள் இடம் விட்டு இடம் பெயர்வது அற்புதமான காட்சி அனுபவமாக இருக்கும்.
இந்தத் தொடரிலும் சில பீமீங் சீக்வன்சுகள் அருமையாக இருக்கின்றன.
அறிவியல் புதினங்களை விரும்பி பார்ப்போர் அவசியம் பார்க்க வேண்டிய தொடர் தான்.
தொடர் என்பதால் மிக நீண்ட நேரத்தை தின்றுவிடும்.
ஒரு பகுதியை பாதியில் நிறுத்தி பார்க்கும் பக்குவம் உள்ளவர்கள் இதை தொடரை பார்க்கலாம்.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக