எட்டுத் தனித்தனி கதைகளைக் கொண்ட அனிமேஷன் குறும்படத்தொகுப்பு.
அனிமேசன் ரசிகர்கள் கொண்டாடும் அளவில் தரமான சம்பவம்.
க்யானு ரீவ்ஸ் முதல் ஆர்னால்ட் ஸ்வர்ஸ்னேகர் வரை இவற்றிலுண்டு.
இரு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த மேட்ரிக்ஸ் அனிமி நினைவில் வந்தது.
ஒரு பாகத்தில் ரோபோட் ஒன்று மனிதர்களுக்கு எதிராக போரிடுகிறது. ஆனால் நாம் அந்த ரோபோவின் பக்கம் நிற்கிறோம்.
ரோபோ வெற்றி பெற விரும்புகிறோம்!
என்னை நிறையச் சிந்திக்க வைத்த பாகம் இது.
பார்வையாளர்கள் அறம்சார்ந்து இருப்பதால் இது சாத்தியப் படுகிறதா? அல்லது முழுக்க முழுக்க இயக்குனரின் கலை நேர்த்தியா? என்று வியக்காமல் இருக்க முடியாது.
இதே போல ஆர்னால்ட் நடித்திருக்கும் பாகம் நேர்த்தியான கவிதை. 400 பக்க நாவல் தருகின்ற நிறைவை இந்த ஒற்றை பாகம் தந்து விடுகிறது.
எட்டு பாகங்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன.
அமேசான் பிரைமில் இருக்கிறது.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக