ஸ்னைப்பர் கதையாக துவங்கி அறிவியல் திரைக்கதையாக விரிகிறது. லண்டனைச் சேர்ந்த வில்லியம் ஒரு சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பாறை முகடு ஒன்றுக்கு அனுப்பப்படுகிறான்.
இரவு நேரத்தில் பாறை பிளவுகளுக்குள் இருந்து வெளிவரும்வினோதமான ஜந்துக்களை சுட்டுத் தள்ளுவது, அவை பாறை பிளவு அடைந்து உலகத்துக்குள் நுழைந்து விடாமல் காப்பது அவனுடைய கடமை.
இதேபோல் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்னைப்பர் ஒருத்திக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருவர் தங்குவதற்காக பிளவின் இக்கரையில் ஒன்றும் அக்கரையில் ஒன்றுமாக எதிர் எதிராக இரண்டு பெரும் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்றன.
எக்காரணம் கொண்டும் இவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்பது இவர்களுக்கான ஆணை.
இந்தப் பக்கம் தனிமையில் இருக்கும் ஒரு ஆண், அந்தப் பக்கம் தனிமையில் இருக்கும் ஒரு பெண். இருவருமே உலகின் தலைசிறந்த ஸ்னைப்பர்கள் .
என்ன நடக்குமோ அது நடக்கிறது ...
இதில் திகில், ராணுவ சதி, ஒரு அணுகுண்டு என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
இறுதியில் இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.
படத்தை கொஞ்சம் ஸ்பாயில் பண்ணி இருந்தாலும் அறிவியல் புதினங்களை ரசித்து பார்ப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக