புத்தகத் திருவிழாவின் 8 நாள் ஒரு நம்ப முடியாத ஆச்சர்யம்.
ஈரோடு மகேஷ் பேசத் துவங்க, அய்யா சகாயம் வருவாரா என்று காத்திருக்க மக்கள் வெள்ளதில் நீந்தி வந்தார் சகாயம்.
சகாயம் இளம் மாணவர்களுக்கு எழுச்சியூட்டும் நம்பிக்கையூட்டும் பேச்சை தந்தார்.
நெகிழ்வான பேச்சு அது.
குழந்தைகளுக்கு நம்பிக்கை தரும் பெரும் பேச்சு!
இந்த நான்காம் ஆண்டின் ஆகச் சிறந்த நிகழ்வாக, நிகழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தங்களை உருக்கிக் கொண்டு ஓடிய தோழர்களுக்கு கிடைத்த ஊக்கமூட்டும் பேச்சாகவும், அங்கீகாரமாகவும் சகாயம் அவர்களின் வருகை இருந்தது.
மக்கள் பாதையின் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் குழுமி மகிழும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு இருந்தது.
தொடர்வோம்.
Comments
Post a Comment
வருக வருக